Most popular Indian movies 2023: 2023ல் மிகச்சிறந்த பாப்புலர் இந்திய படங்கள் எது தெரியுமா.. பாக்கலாம் வாங்க!
சென்னை: இனிதாக துவங்கிய 2023 இன்னும் ஒரு மாதத்தில் எண்ட் கார்ட் போடவுள்ளது.
இப்போதுதான் 2023 துவங்கியதாக அங்கலாய்ப்பவர்கள் சிலர், இந்த ஆண்டு சிறப்பாக அமைந்ததாக வெற்றிப் புன்னகை பூப்பவர்கள் சிலர் என வழக்கம்போல கலவையான மனிதர்களை இந்த ஆண்டும் சந்தித்துள்ளது.

கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மீண்டு இந்த ஆண்டு சர்வதேச அளவில் சினிமா வெற்றிநடை போட்டு வருகிறது.
பாதிப்பை சந்தித்த திரையுலகம்: கொரோனா உள்ளிட்ட பல பிரச்சினைகளை கடந்த இரு ஆண்டுகளில் திரையுலகம் சந்தித்தது. திரையரங்குகளில் மூடப்பட்டன. பலர் வாழ்வாதாரங்களை இழந்தனர். படங்கள் ஓடிடியில் வெளியாகி புதிய பாதையை துவங்கியது. முன்னதாகவே இந்த பிளாட்பார்ம் இருந்தபோதிலும் கொரோனாவால் இது மேலும் வலுப்பெற்றது. தற்போதும் வாரத்திற்கு கணிசமான படங்கள் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
வெற்றியை சந்தித்த திரையுலகம்: இருந்தபோதிலும் திரையரங்குகளில் ஒரு படத்தை பார்த்து, அதன் பிரம்மாண்டத்தில் துளைத்து, அந்த அனுபவத்தை பெற தற்போதும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் வெளிப்பாடே முன்னணி இயக்குநர்கள் முதல் அறிமுக இயக்குநர்களின் படங்கள் வரையில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து, வெற்றிப்படமாக மாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டுகளின் கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மீண்டு இந்த ஆண்டு சர்வதேச அளவில் திரையுலகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அதிகரித்த ரிலீஸ் எண்ணிக்கை: சர்வதேச அளவில் அதிகமான படங்கள் இந்த ஆண்டில் ரிலீசாகி வருகின்றன. இந்த ஆண்டிற்கு இன்னும் ஒரு மாதம் மீதமிருக்கும் நிலையில் படங்களின் ரிலீஸ் எண்ணிக்கை மேலும் அதிகரித்தே காணப்படுகின்றன. சில படங்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குழந்தைகளின் அரையாண்டு பரிட்சைக்கான லீவும் வரும் என்பதால் அந்த விடுமுறையை கவனத்தில் கொண்டு படங்கள் ரிலீசாகவுள்ளன.
இந்திய அளவில் பிரபலமான முதல் 10 படங்கள்: இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் இந்திய அளவில் மிகவும் பிரபலமான முதல் 10 படங்களின் பட்டியலை தற்போது IMDb வெளியிட்டுள்ளது. இந்தப் படங்களில் முதல் இரண்டு இடங்களை ஷாருக்கானின் ஜவான் மற்றும் பதான் படங்கள் பிடித்துள்ளன. மூன்றாவது இடத்தில் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி என்ற இந்திப் படம் உள்ளது. ரன்பீர் சிங், ஆலியா பட் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படம் மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றது. கரண் ஜோஹர் படத்தை இயக்கியிருந்தார்.
பட்டியலில் இடம்பெற்ற லியோ மற்றும் ஜெயிலர்: இந்த பட்டியலில் தென்னிந்திய அளவில் இரு படங்களே இடம் பெற்றுள்ளன. விஜய்யின் லியோ மற்றும் ரஜினியின் ஜெயிலர் ஆகிய படங்கள் முறையே 4வது மற்றும் 6வது இடங்களை பிடித்துள்ளன. தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிப்படங்கள் தென்னிந்திய அளவில் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இதனிடையே 5வது இடத்தில் பாலிவுட் படமான OMG 2 இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அக்ஷய் லீட் கேரக்டரில் இணைந்திருந்தார்.
கவனத்தை பெற்ற தி கேரளா ஸ்டோரி: 7வது இடத்தில் கதார் 2வும், தி கேரளா ஸ்டோரி படம் 8வது இடத்திலும் 9 மற்றும் 10வது இடங்களில் முறையே துஜ் ஹுத் மெயின் மக்கார், போலா போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தி கேரளா ஸ்டோரி படம் மிகப்பெரிய அதிர்வுகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவா திரைப்பட விழாவில் இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த 10 படங்களின் பட்டியல் மட்டுமில்லாமல் இந்த ஆண்டில் அதிகமான ஸ்மால் பட்ஜெட் படங்களும் மிகவும் பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











