twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2022ல் பிரபலமான 10 படங்கள்... IMDb லிஸ்ட்டில் பொன்னியின் செல்வன், பீஸ்ட், வலிமைக்கு வந்த சோதனை

    |

    சென்னை: கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் 2022ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் ஏராளமான படங்கள் வெளியாகின.

    அந்த வகையில் 2022ம் ஆண்டில் இந்தியா முழுவதும் வெளியான படங்களில் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது.

    இதில் தென்னிந்திய சினிமாக்கள் அதிகளவில் இடம்பிடித்து இருந்தாலும் தமிழ்ப் படங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்துள்ளது.

     OTT Exclusive: சுழல் முதல் வதந்தி வரை... 2022ம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய தமிழ் வெப் சீரிஸ்கள்! OTT Exclusive: சுழல் முதல் வதந்தி வரை... 2022ம் ஆண்டில் பட்டையைக் கிளப்பிய தமிழ் வெப் சீரிஸ்கள்!

     முதலிடத்தில் ஆர்.ஆர்.ஆர்

    முதலிடத்தில் ஆர்.ஆர்.ஆர்

    பிரபல IMDb நிறுவனம் உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படங்களுக்கான ரேட்டிங்கை வழங்கி வருகிறது. ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பை அடிப்படையாக வைத்து பல பிரிவுகளில் IMDb ரேட்டிங் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2022ல் வெளியானதில் பிரபலமான திரைப்படங்களின் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது. அதில், ராஜமெளலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கோல்டன் குளோப், ஆஸ்கர் என பல சர்வதேச விருதுகளுக்கான் போட்டியில் பங்கேற்றுள்ள ஆர்.ஆர்.ஆர், 2022ல் இந்தியாவின் பிரபலமான திரைப்படம் என்ற அங்கீகாரத்தையும் தற்போது தனதாக்கியுள்ளது.

     தி காஷ்மீர் ஃபைல்ஸ், கேஜிஎஃப் 2

    தி காஷ்மீர் ஃபைல்ஸ், கேஜிஎஃப் 2

    இரண்டாவது இடத்தில் பாலிவுட்டில் வெளியான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் உள்ளது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இந்தப் படம் காஷ்மீரில் உள்ள இந்து பண்டிட்களுக்கு நடந்த கொடுமையை பேசுவதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சினிமா ஆர்வலர்களும் இந்தப் படம் உண்மைக்குப் புறம்பான வரலாற்றைப் பேசுவதாக விமர்சனம் செய்திருந்தனர். மூன்றாவது இடத்தில் யாஷ் நடிப்பில் வெளியான 'கேஜிஎஃப் 2' உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் உருவான கேஜிஎஃப் 2, பான் இந்தியா படமாக வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 1400 கோடிக்கும் மேல் வசூலித்த இந்தப் படம் IMDb பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளது.

     விக்ரம், காந்தாரா

    விக்ரம், காந்தாரா

    இந்தப் பட்டியலில் கமலின் விக்ரம் திரைப்படம் 4வது இடத்தை பிடித்துள்ளது. தமிழில் விக்ரம் தான் இந்த லிஸ்ட்டில் டாப்பில் உள்ளது குறிப்பிடக்கது. லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா என மல்டி ஸ்டார்ஸ் படமாக ரிலீஸான விக்ரமன், வசூலிலும் 600 கோடிகளுக்கு மேல் குவித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கன்னடத்தில் வெளியான காந்தாரா படத்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்த இந்தப் படம், வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவாகி 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்தியா முழுவதும் இந்தப் படம் மிகப் பெரிய பேசுபொருளாக இடம்பிடித்தது.

     ராக்கெட்ரி, மேஜர், சீதா ராமம்

    ராக்கெட்ரி, மேஜர், சீதா ராமம்

    IMDb பட்டியலில் 6வது இடத்தில் மாதவனின் ராக்கெட்ரி படம் உள்ளது. நம்பி நாராயணனின் பயோபிக் படமாக வெளியான ராக்கெட்ரி மேக்கிங்கில் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், பல உண்மையான தகவல்கள் இல்லாமல் மாதவனின் கற்பனையில் உருவான பேண்டசி திரைப்படம் என பலரும் விமர்சித்திருந்தனர். இந்த வரிசையில் மேஜர் திரைப்படம் 7வது இடத்தை பிடித்துள்ளது. 26/11 மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக வைத்து தெலுங்கில் உருவானது. அதேபோல், துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடித்த சீதா ராமம் இந்தப் பட்டியலில் 8வது இடம் பிடித்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியான சீதா ராமம், பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடியை தொட்டது.

     பொன்னியின் செல்வன், 777 சார்லி

    பொன்னியின் செல்வன், 777 சார்லி

    கோலிவுட் ரசிகர்களால் பயங்கரமாக கொண்டாடப்பட்ட பொன்னியின் செல்வன் IMDb பட்டியலில் 9வது இடத்தையே பிடித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்த இந்தப் படம், கல்கியியின் பொன்ன்யின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து உருவானது. ப்ரோமோஷன், தமிழர்களின் வரலாறு என்ற விளம்பர யுக்தியால் வசூலில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன், எதிர்பார்த்த அளவில் மற்ற ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதையே இது காட்டுகிறது. இறுதியாக பத்தாவது இடத்தில் கன்னடத்தில் வெளியான 777 சார்லி இடம்பெற்றுள்ளது. பான் இந்தியா படமாக வெளியான 777 சார்லி, அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

     கோலிவுட் படங்களுக்கு ஏமாற்றமே

    கோலிவுட் படங்களுக்கு ஏமாற்றமே

    ஒட்டுமொத்தமாக இரண்டு தமிழ்ப் படங்கள் மட்டுமே IMDb லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, தனுஷின் திருச்சிற்றம்பலம் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தமிழ்நாட்டை தவிர மற்ற மொழிகளில் எடுபடவில்லை எனத் தெரிகிறது. விக்ரம் மட்டுமே 4வது இடம் பிடித்துள்ளது, முக்கியமாக பொன்னியின் செல்வன் 9வது இடத்தில் இருப்பதும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

    English summary
    IMDb has listed the most popular 10 Indian movies of 2022. Among them, Rajamouli's RRR film has stood first. Also, only Vikram and Ponniyin Selvan movies in Tamil are included in this list.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X