நீ நீயா இரு மக்கள் அதைத்தான் விரும்புவார்கள்… சின்னப்பொண்ணுக்கு அட்வைஸ் கொடுத்த இமான் !
சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு நாடியா சங் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர் உள்ளனர்.
இதையடுத்து நேற்று நடந்த நாமினேஷன் ப்ராசாலில் அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்.
கடந்த வாரம் பாவனி ஒருவரும் நாமினேட் செய்யாத நிலையில் இந்த வாரம் பலர் அவரை நாமினேட் செய்துள்ளனர். அதேபோல அபிஷேக்கையும் பலர் நாமினேட் செய்துள்ளனர்.

9 போட்டியாளர்கள்
நேற்று இந்த வார கேப்டனுக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில், சிபி வெற்றி பெற்று இந்த வீட்டின் தலைவரானார். இதனை தொடர்ந்து நாமினேஷன் நடைபெற்றது, அதன்படி அபிஷேக், அக்ஷரா, அபினய், இசைவாணி, சின்னப்பொண்ணு, தாமரை செல்வி, ஐக்கி பெர்ரி, பிரியங்கா, பாவ்னி ஆகிய 9 பேர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளனர்

16வது நாள்
16வது நாள் காலை பாட்டுடன் தொடங்கியது. சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, அபினய், ராஜு ஆகியோர் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது பேசும் சின்னபொண்ணு, இசை வாணிக்கிட்ட நான் எது பேசினாலும் காது கொடுத்து கேட்க மாட்ரா அது எனக்கு கஷ்டமாக இருக்கு என்றார்.

இசைவாணி
அப்போது பேசிய ராஜு இதை இசைவாணிக்கிட்ட சொன்னீங்களா என்று கேட்கிறார். அதற்கு சின்னப்பொண்ணு , சொல்லலா என்கிறார். அவ கிட்ட சொன்ன ரொம்ப கஷ்டப்படுவா அதனால வேண்டாம் என்கிறார். நான் ஒரு மூத்தக்கலைஞர் வெளியில மக்கள் என்ன நினைப்பார்கள் என்றார்.

நீ நீயா இரு
அப்போது பேசிய இமான் அண்ணாச்சி, நீங்க நினைக்கிற மாதிரி மக்கள் நினைக்க மாட்டாங்க, இங்க வந்து நீங்க நீங்களா இருங்க, வெளியில் உங்க வீட்ல, உங்க பசங்க கிட்ட எப்படி இருந்தீங்களோ அப்படி இருங்க என்றார். இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு உங்களை பிடிக்காமல் போனால்கூட, மக்கள் உங்களுக்காக வோட் போடுவாங்க , அந்த அம்மா கிட்ட நீங்க பேசமாட்டீங்களா என்று உங்களுக்கு வோட் போடுவாங்க என்கிறார் இமான் அண்ணாச்சி.

பஞ்சதந்திரம்
இதையடுத்து, லக்சரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கிற்கு பஞ்ச தந்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வீடு அருங்காட்சியமாக மாற்றப்படுகிறது. அந்த வீட்டில் விலை மதிப்பற்ற 5 நாணயங்கள் வைக்கப்படுகின்றன. இதில் இரண்டுநாணயங்கள் திருடப்பட்டுள்ளது 2 நாணயங்களை காணவில்லை என்று பிக் பாஸ் அறிவித்தார். நாணத்தை கொடுத்தவர்கள் கேமரா முன் காட்டாயம் காட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் நாணயம் காணமல் போனதாகத்தான் அறிவிக்கப்படும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











