நான் அக்ஷராவிடம் தப்பா நடக்கவில்லை… டாஸ்கிற்காக அப்படி செய்தேன்… விளக்கம் அளித்த நிரூப் !

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் சண்டை சச்சரவு இல்லாமல் அனைவரும் அன்பாக இருந்தனர்.

இதைப்பார்த்த கமல் கூட பெண்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஆண்கள் அனைவரும் நட்பு பாராட்டு வருகிறார்கள் என்றார்.

கமல் கூறியதற்கு திஷ்டிபரிகாரம் வைப்பது போல, பிக் பாஸ்வீட்டில் மியூட் போடும் அளவுக்கு கெட்டவார்த்தை பேசி வீட்டை அலறவிட்டனர். எனக்கு சத்தமா பேசினால் பிடிக்காது என்று இதுநாள் வரைக்கும் சீன் போட்டு வந்த அக்ஷரா சிபியிடம் எகிறினார்

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்களுக்காக அல்லாமல் மற்றவர்களுக்காக விளையாட வேண்டும்.

வெளியேற்றப்படுவார்

வெளியேற்றப்படுவார்

இதற்காக கார்டன் ஏரியாவில் கூடாரம் போடப்பட்டு இருந்தது, போட்டியாளர்களில் யார் பொம்மையுடன் கடைசியாக கூடாரத்தின் உள்ளே செல்கிறாரோ? அவரின் கையில் இருக்கும் பொம்மையில் ஒட்டப்பட்டிருக்கும் பெயருடைய நபர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பது தான் டாஸ்க்.

அக்ஷராவை தடுத்த நிரூப்

அக்ஷராவை தடுத்த நிரூப்

அப்போது, அக்‌ஷராவும் வருணும் மற்ற போட்டியாளர்களுடன் டீல் போட்டு விளையாடினார்கள். அக்ஷரா வருணின் பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடும் போது, அவரின் இடுப்பை பிடித்துக்கொண்டு அவர் கூடாரத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தார் நிரூப். இது தான் பெரிய சண்டைக்கு வழிவகுத்தது.

கொச்சையான பேச்சு

கொச்சையான பேச்சு

நிரூப்பும், வருணும் மாறி மாறி திட்டிக் கொண்டனர். அகஷ்ராவை நிரூப் பிடித்து தடுத்தது தான் இவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் காரணம் என்றார் வருண். நிரூப் பெரிய மாடு, அது இதுன்னு கொச்சையாக பேசினார் வருண். பதிலுக்கு நீருப்பும் பொம்பளைய வச்சி ஆடுறேன்னு கேட்க, சண்டைக்குள் அக்‌ஷரா நுழைய மிகப் பெரிய களேபரம் வெடித்தது.

பத்திரகாளியாக மாறிய அக்ஷரா

பத்திரகாளியாக மாறிய அக்ஷரா

இந்த 3 பேரின் சண்டைக்குள் சிபி வந்து, போன டாஸ்கில் நீ இப்படித்தானே பண்ணே என்று கேட்டார். இதனால் சிபி அக்ஷரா இருவருக்கும் சண்டை முற்றி இறுதியில் மியூட் போடும் படியான வார்த்தையை சிபி பயன்படுத்தினார். ஆனால் அக்ஷரா பத்திரகாளியாக மாறி வீட்டை இரண்டாக்கினார்.

 கோவம் இல்லை

கோவம் இல்லை

இதையடுத்து, டாஸ்கின் போது நடந்த சண்டைகுறித்து, இமான், சிபி, நிரூப் 3 பேரும் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பேசிய சிபி, அக்ஷரா மீதும் வருண் மீதும் தனக்கு கோபமே இல்லை, வருண் ஒரு பொம்பளைய போய் இப்படி புடிக்கிறீயே என்று நிரூப்பை பார்த்து கேட்டது எனக்கு பிடிக்கவில்லை. போன கேம்ல அக்ஷரா இப்படித்தானே விளையாடுன, இதை மற்றவர்கள் செய்தால் கோவம் வருதா என்றார்.

நான் தவறா நடக்கவில்லை

நான் தவறா நடக்கவில்லை

அவரை தொடர்ந்து பேசிய நிரூப், நான் அக்ஷராவிடம் உன்னை நான் தவறாக தொட்டேனா என்று கேட்டேன், அதற்கு அக்ஷராவும் இல்லை என்று என்றார். அதோட அந்த பிரச்சினை பத்தி நான் யோசிக்கல விட்டு விட்டேன் என்றார். என்னத்தான் கேமா இருந்தாலும், நிரூப்பின் செய்கையால் பிக் பாஸ் ரசிகர்கள் அவர் மீது கடுப்பில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X