இந்த வாரம் எவிக்ட் ஆன இமான் அண்ணாச்சி.. கதறி அழுத ராஜு.. பெரிய அண்ணாச்சி என பாராட்டிய கமல்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இமான் அண்ணாச்சி தான் எவிக்ட் ஆனார் என ஏற்கனவே தகவல் வழக்கம் போல கசிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் அதனை அதிகாரப்பூர்வமாக கமல் அறிவித்து விட்டார்.
சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டி சுட்டீஸ் உள்ளிட்ட ஷோக்களை சன் டிவியில் நடத்தி பிரபலமானவர் இமான் அண்ணாச்சி.
பிக் பாஸ் வீட்டில் இருந்து பெரிய அண்ணாச்சியாக வெளியேறுகிறீர் என கமல் பாராட்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட அண்ணாச்சிக்கு கண்டிப்பாக என உறுதியும் அளித்துள்ளார்.

இமான் அண்ணாச்சி எவிக்டட்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் பத்தாவது வாரத்தில் இமான் அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டார். ராஜுவுடன் கடைசி 100 நாட்கள் வரை இருப்பேன் என மிகவும் உறுதியாக இருந்த இமான் அண்ணாச்சியை பிக் பாஸ் குழுவே பக்காவாக பார்சல் செய்து விட்டதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

முன்னதாக சேவ் ஆன அபிநய்
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நபராக சிபி சேவ் ஆன நிலையில், சன்டே எபிசோடில் முதல் நபராக தாமரை சேவ் ஆனார். அதன் பிறகு அக்ஷரா மற்றும் இமான் அண்ணாச்சி இருவரில் அக்ஷரா சேவ் ஆகி விட்டார். கடைசியாக அமீர் மற்றும் அபிநய் இடையே இருந்த போட்டியில் அபிநய் சேவ் ஆகி விட்டார். வழக்கமாக கடைசி நபராக சேவ் ஆகும் அபிநய் இந்த வாரம் முன்னதாக சேவ் ஆக காரணமே பாவனி ஆர்மியினர் போட்ட ஓட்டுக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கதறி அழுத ராஜு
இமான் அண்ணாச்சியை உண்மையிலேயே தனது சொந்த உறவாகவே நினைத்து பார்த்து பழகியது ராஜு தான். வெளியே வந்து ராஜு படம் நடித்தாலும் இமான் அண்ணாச்சிக்கு கண்டிப்பாக ரோல் இருக்கும் என்பது கன்ஃபார்ம். ராஜுவுக்கு ஆறுதல் சொல்லி விட்டு இமான் அண்ணாச்சி வீட்டில் இருந்து விடை பெற்றார்.

பெரிய அண்ணாச்சி
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லிக் கொண்டு வரும் எனக்கே இது எதிர்பாராத ஒன்று என இமான் அண்ணாச்சி வெளியேற்றம் குறித்து பேசிய கமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அண்ணாச்சி ஆகிட்டீங்க என புதிய பட்டத்தையே வழங்கி பாராட்டினார்.

படத்தில் நடிக்க சான்ஸ்
இதுதான் சமயம் என கேப்பில் கிடா வெட்டுவதை போல இதுவரை உங்களுடன் இணைந்து நடித்ததில்லை. ஒரு சான்ஸ் கொடுப்பீங்களா என கேட்க, உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலைன்னா அவங்க என் கிட்ட கேட்பாங்க கண்டிப்பா இணைந்து பண்ணுவோம் என உறுதி அளித்து இமானை வழியனுப்பினார் உலக நாயகன்.
Recommended Video

அடுத்த வாரம் யார்
பாவனி மற்றும் அபிநயை இந்த வாரம் கமல் இந்த வாங்கு வாங்கி விட்ட நிலையில், அடுத்த வாரம் பாவனி ஆர்மியினர் கண்டிப்பாக அபிநய்க்கு ஒரு ஓட்டு கூட போடமாட்டாங்க.. அதனால் அடுத்த வாரம் அபிநய் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என தெரிகிறது. மீண்டும் நெபோடிசம் வேலை செய்தால் பாவனி வெளியேறவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. கடைசியில் நிரூப்புக்கு அபிநய் நிலைமை வந்துடுச்சு!


Click it and Unblock the Notifications











