எகிறும் அண்ணாச்சியின் மதிப்பு.. இசைவாணியுடனும் பிரச்சனையை பேசி புரிய வைத்து செம ஸ்கோர் பண்ணிட்டாரு!
சென்னை: இமான் அண்ணாச்சி மற்றும் பாவனி ரெட்டி இடையே நடந்த அண்ணன் தங்கை உரையாடல் ரசிகர்களை எந்த அளவுக்கு ரசிக்க வைத்ததோ அதே அளவுக்கு இசைவாணியுடன் அண்ணாச்சி பேசியதும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.
பிரியங்காவின் பாசிட்டிவிட்டி மோட் சற்றே குறைந்த நேரத்தில் அண்ணாச்சியின் மதிப்பு ரசிகர்கள் மத்தியில் ராக்கெட் வேகத்தில் எகிறி வருகிறது.
இசைவாணியும் நேரடியாகவே அண்ணாச்சியிடம் அந்த பிரச்சனையை பற்றி பேசி தீர்த்துக் கொண்டது பாராட்டுக்களை அள்ளி உள்ளது.

இமான் அண்ணாச்சி
சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிச் சுட்டீஸ் என சன் டிவியில் கலக்கி வந்த இமான் அண்ணாச்சி பல படங்களில் காமெடியனாகவும் கலக்கி உள்ளார். இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி கலந்து கொண்டுள்ள நிலையில், சக போட்டியாளர்களிடம் மிகவும் அக்கறை மற்றும் அன்பை வெளிப்படுத்தியே பழகி வருகிறார்.

உடன்பிறப்பே
பாவனி ரெட்டி தனது சோகக் கதையை இமான் அண்ணாச்சியிடம் சொல்லி அழ, நீ ஏன் கவலைப்படுற அண்ணன் நான் இருக்கேன்ல என அக்கறையோடு பேசி அவருடைய கஷ்டத்தை வெகுவாக குறைத்ததை பார்த்து ரசிகர்கள் அண்ணாச்சியை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

கடைசியில் கலாய்
ரொம்ப வயசான அண்ணன் என கடைசியில் அழுது கொண்டிருந்த பாவனி ரெட்டியே கலாய்க்கும் அளவுக்கு அவரது மனதை தேற்றி அண்ணாச்சி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக மதிப்பெண்களை நேற்றைய எபிசோடில் அள்ளி உள்ளார். ஓட்டுக்களும் அண்ணாச்சி அதிகமாகவே விழுவதாகவும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இசைவாணியுடன் பிரச்சனை
கானா பாடகியான இசைவாணி பாடிக் கொண்டிருக்கும் போது இமான் அண்ணாச்சி கலாய்த்ததை அவர் தவறாக புரிந்து கொண்ட நிலையில், இருவருக்கும் இடையே லேசான மனஸ்தாபம் ஏற்பட்டது. ஆனால், எந்த மூன்றாவது நபரையும் வைத்து டீல் பண்ணாமல் இந்த பிரச்சனையை நேரடியாகவே இமான் அண்ணாச்சியிடமே பேசி தீர்த்துக் கொண்டார் இசைவாணி.

தப்பா பேசல
இசைவாணி அண்ணாச்சியிடம் இந்த பிரச்சனையை எடுத்து வைக்கும் போது, நான் எந்த தப்பான எண்ணத்திலும் பேசல உன்னை காயப்படுத்த வேண்டும் என்றும் நினைக்கல எப்படி உனக்குள்ள இவ்ளோ எனர்ஜி இருக்குன்னு தான் கேட்க வந்தேன் அதற்குள் நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட என பேசி புரியவைத்து நல்லாவே ஸ்கோர் செய்து விட்டார்.

இப்போதைக்கு இல்லை
இந்த சீசனின் டஃப் ஆன போட்டியாளர்கள் பட்டியலிலேயே இமான் அண்ணாச்சி முன்னேறி உள்ளார். இப்போதைக்கு அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற மாட்டார் என்றும் கடைசி வரை தாக்கு பிடிப்பார் என்றும் ரசிகர்கள் இமான் அண்ணாச்சியின் வளர்ச்சி குறித்து கணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











