'விசுவாசம்' படத்திற்கு பிறகு டி.இமானுக்கு தொடரும் அதிர்ஷ்டம்!
Recommended Video

சென்னை : பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடித்திருக்கும் டி.இமானுக்கு இந்த வருடம் வெகு சிறப்பானதாகவே அமைந்திருக்கிறது.
100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவருக்கு புத்துணர்வு கொடுக்கும் வகையில் அமைந்தது சிவா இயக்கத்தில் அஜித்தின் 'விசுவாசம்'.
தற்போது இவர் கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளாராம். இதனால் ஏக குஷியில் இருக்கிறார் டி.இமான்.

100 படங்களுக்கு இசை
2002-ம் ஆண்டு 'காதலே' சுவாசம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் டி.இமான். ஆனால், அந்தப் படம் வெளிவரவில்லை. 'தமிழன்' தான் முதல் படமாக அமைந்தது. இப்போது 'டிக் டிக் டிக்' இமானின் இசையில் வெளியாகியிருக்கும் 100-வது படம்.

பாகுபாடில்லாமல் இசையமைப்பவர்
இமான் தனது இசைப் பயணத்தில் 125 பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறாராம். சின்ன பட்ஜெட் படம், பெரிய பட்ஜெட் படம், பெரிய நடிகர் படம், அறிமுக நடிகர் படம் என்ற பாகுபாடு இல்லாமல் பல்வேறு படங்களில் பணியாற்றி இருக்கிறார் இமான்.

அஜித் படத்துக்கு
நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. 'விசுவாசம்' படத்தில் யுவன் இசையமைப்பதாக இருந்து அவர் வெளியேற அந்த வாய்ப்பு இமானுக்கு கிடைத்திருக்கிறது. அஜித் படத்துக்கு இசையமைக்கிறேன் என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் இமான்.

கன்னடத்தில்
இந்நிலையில், கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் இமான். 2018-ல் பெரிய நடிகர்களின் படங்களில் கமிட்டாகி வரும் டி.இமானுக்கு அவரது ரசிகர்களும் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











