twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குத்துப்பாட்டுன்னாலே கடுப்பா இருக்கு... இமான் கொதிப்பு

    By Shankar
    |

    D Imman
    சென்னை: குத்துப் பாடல்கள் என்றாலே செம கடுப்பாக இருக்கிறது. கானா, கிராமியப் பாடல்கள், மெலடிக்கு இசையமைக்கவே விரும்புகிறேன், என்றார் இசையமைப்பாளர் டி இமான்.

    மைனாவுக்குப் பிறகு, கோயிங் ஸ்டெடி எனும் அளவுக்கு தொடர்ந்து நல்ல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இமான். அவரது இசையில் யாருடைய தாக்கம் அதிகம் என்ற விமர்சனம் இருந்தாலும், பாடல்கள் ஹிட்டாகிவிடுகின்றன. மைனா, மனம் கொத்திப் பறவை, சமீபத்தில் வந்த கும்கி போன்ற படங்கள் அவரை முக்கிய இடத்துக்கு கொண்டு வந்துள்ளன.

    இப்போது தன்னைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் சொந்த இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார் இமான். இதற்காக இமானிட்டி (Immanity) என்ற சமூக வலைத் தளத்தையும், இமான்கம்போஸர் என்ற சொந்த தளத்தையும் ஆரம்பித்துள்ளார். பேஸ்புக், ட்விட்டர், லிங்டுஇன் போன்ற நெட்வொர்க்குகளிலும் தனக்கென தனிப்பக்கத்தை ஆரம்பித்துள்ள இமான், இந்த செய்தியைப் பகிரவும், தனது வெற்றிகளுக்கு நன்றி தெரிவிக்கவும் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவரிடம், சமீப காலத்தில் குத்துப் பாடல்கள் குறைந்துவிட்டனவே, என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

    அதற்கு பதிலளித்த அவர், "நல்லதுதானே... ஆரோக்கியமான விஷயம் இது. குத்துப் பாடல்கள் என்றாலே கடுப்பாகத்தான் உள்ளது.

    முன்பெல்லாம் ஐந்து பாடல்களில் நான்கு பாடல்கள் குத்துப்பாடலாக இருக்கும். ஒரு 'மெலடி' பாடலாவது வச்சுக்கலாமே என கேட்டு கெஞ்சுவோம். அந்த நிலைமை தற்போது மாறுகிறது. மெலடி பாடல்கள் நிறைய வருகின்றன. குத்துப் பாடல்களைவிட கானா மற்றும் கிராமிய பாடல்கள்தான் ரசிக்க தகுந்தவை.

    'சொய்ங்' பாடல் கிராமிய பாடலாக இருந்தாலும் குத்துப்பாட்டுக்கு உள்ள வேகம் இருந்தது. இதுபோல் குத்துப்பாடல்களில் மாற்றம் ஏற்படவேண்டும். இயக்குனர்களின் இசை ரசனையும் முக்கியம். கதையே இசையை தீர்மானிக்கின்றன," என்றார்.

    பாடல் கம்போசிங்குக்காக வெளிநாட்டுக்கே செல்லாத இசையமைப்பாளர் நீங்கள்தான் என்கிறார்களே? ஏன் அப்படி?

    "நான் ஈசிஆரைக் கூட தாண்டியதில்லை. இசையமைக்க ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இசையமைப்பாளர்கள் செல்வது அவரவர் விருப்பம். எனக்கு வீட்டில், என் ஸ்டுடியோவில் வைத்து இசையமைக்கத்தான் பிடிக்கும். அது என் வீட்டில் தரையில் உட்கார்ந்து தட்டில் சாதம் போட்டு ரசம் ஊற்றி பிசைந்து சாப்பிடுவதைப் போல வசதியானதும் கூட," என்றார்.

    இப்போது விஜய் நடிக்கும் 'ஜில்லா', விமல் நடிக்கும் 'தேசிங்குராஜா' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறாராம் இமான்.

    சரி... விஜய் ஒரு குத்துப்பாட்டு ப்ரியராச்சே... அவர் கேட்டாலும் 'குத்து' போட மாட்டீங்களா இமான்!!

    English summary
    D Imman says that he always loves to compose good songs instead of Kuthu numbers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X