விக்ரம் மகனையும் விட்டு வைக்கவில்லையா?
சென்னை: த்ருவ் பற்றி விக்ரமின் மேனேஜர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தந்தை விக்ரம் வழியில் நடிகராகிவிட்டார் த்ருவ். அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா மூலம் அவர் ஹீரோவாகியுள்ளார். விக்ரமின் கெரியரில் முக்கிய பங்கு வகிக்கும் பாலா தான் வர்மா படத்தை இயக்கியுள்ளார்.
த்ருவ் விக்ரம் பெயரில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கணக்கு உள்ளது. அந்த கணக்குகளில் இருந்து அவ்வப்போது ஏதாவது மெசேஜ் போடப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து விக்ரமின் மேனேஜர் சூர்யநாராயணன் ட்வீட் செய்திருப்பதாவது,
த்ருவ் விக்ரம் ட்விட்டரிலோ, ஃபேஸ்புக்கிலோ கணக்கு வைத்திருக்கவில்லை. அவர் இன்ஸ்டாகிராமில் மட்டுமே உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications