twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறதா கோப்ரா...தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தடாலடி விளக்கம்

    |

    சென்னை : விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் வேலைகளை விரைந்து முடிக்க படக்குழுவினர் முழுவீச்சில் இறங்கியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டது.

    இந்த படத்தில் அதிக அளவில் சிஜிஐ ஷாட்கள் வைக்கப்பட்டுள்ளதால், அதன் வேலைகளில் தான் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அத்துடன் எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஒருபுறம் நடந்து வருகிறது.

    இடுப்புல என்ன லுங்கியா.. சைக்கிள் பக்கத்தில் ஒரு சைஸா போஸ் கொடுத்த லாஸ்லியா.. ஜொள்ளும் ஃபேன்ஸ்!இடுப்புல என்ன லுங்கியா.. சைக்கிள் பக்கத்தில் ஒரு சைஸா போஸ் கொடுத்த லாஸ்லியா.. ஜொள்ளும் ஃபேன்ஸ்!

    உரிமத்தை வாங்கியதா நெட்ஃபிளிக்ஸ்

    உரிமத்தை வாங்கியதா நெட்ஃபிளிக்ஸ்

    இதற்கிடையில் இந்த படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் மிகப் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவலால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தனர். ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்று கூறப்படுகிறது.

    தெளிவுபடுத்திய தயாரிப்பு நிறுவனம்

    தெளிவுபடுத்திய தயாரிப்பு நிறுவனம்

    தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இது பொய்யான தகவல் என மறுத்துள்ளது. இந்த குழப்பத்தை அவர்களே தெளிவுபடுத்தி உள்ளதால் டிஜிட்டல் ரிலீஸ் பற்றிய அப்டேட்டிற்காக இன்னும் சில வாரங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். படத்தின் வேலைகள் முழுவதும் முடிந்த பிறகே தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்களா அல்லது டிஜிட்டல் தளத்தில் வெளியிடுகிறார்களா என்ற தகவல் வெளியாகும்.

    வித்தியாசமான விக்ரம் படம்

    வித்தியாசமான விக்ரம் படம்

    விக்ரமின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று கோப்ரா. இது விக்ரமின் மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதால், விக்ரமின் திரையுலக பயணத்தில் கோப்ரா குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

    கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியவர் ஆவார். லலித் குமார் இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பேனரில் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

    விரைவில் பாடல் ரிலீஸ்

    விரைவில் பாடல் ரிலீஸ்

    ஏற்கனவே வெளியிடப்பட்ட சிங்கிள் டிராக் பாடலான தும்பி துள்ளல் பாடலை ரஹ்மான் வெளியிட்டு விட்டார். இது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற பாடல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல்களும் விக்ரம் ரசிகர்களிடமும், இசை பிரியர்களிடமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வில்லனாக அறிமுகமாகும் இர்ஃபான்

    வில்லனாக அறிமுகமாகும் இர்ஃபான்

    இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். அதே போன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகும் படமும் இது தான். இதில் விக்ரமிற்கு வில்லனாக பதான் நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோஷன் மேத்யூ , மிருனாளினி ரவி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    English summary
    The film's production house, Seven Screen Studio, denied the speculation and claimed it to be 'fake'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X