Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதை மாபியா.. ஏரியா டான்.. மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ''அந்த'' ரோல்.. வெளியான செம சீக்ரெட்!
மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் ரோல் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: மாஸ்டர் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் விஜய் சேதுபதியின் ரோல் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது
மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடிக்க உள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் இரண்டு வாரம் முன் வெளியானது.
வைரல் போஸ்டர்
இந்த படத்தில் விஜய் சேதுபதி விஜய் இருக்கும் போஸ்டர் ஏற்கனவே வெளியானது. இருவரும் சண்டை போடுவது போல ஏற்கனவே போஸ்டர் வெளியாகி இருந்தது. இதற்காக தனியாக போட்டோ சூட் நடத்தப்பட்டது. இந்த போட்டோ பெரிய அளவில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
எப்படி இருந்தார்
இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி மாலை போட்டு இருப்பார். அதேபோல் விஜயை விட கொஞ்சம் வயதான தோற்றத்தில் இருப்பார். பார்க்க மிகவும் கொடூரமான ஏரியா வில்லன் போல இருப்பார். விஜய் - விஜய் சேதுபதி இருவரும் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படம் பெரிய வைரலானது.
தோற்றம் எப்படி இருக்கும்
இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் ரோல் என்ன என்ற விவரங்கள் வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி, இந்த படத்தின் போதை பொருள் விற்கும் மாபியா டானாக வருகிறார். தனது ஏரியாவில் அசைக்க முடியாத டானாக இவர் இருக்கிறார் என்கிறார்கள். இவர் மாணவர்களுக்கும் போதை பொருள் விற்பான் என்று கூறுகிறார்கள்.
விஜய் தடுப்பார்
அவருக்கு விஜய்க்கும் ஏற்படும் சண்டைதான் படத்தை நகர்த்தி செல்லும். படத்தின் 15 நிமிடத்திலேயே கதை சூடுபிடிக்கும். குட்டி கதை பாட்டு 15 நிமிடத்திற்கு உள்ளாகவே வந்து விடும். அதன்பின் நிறைய டிவிஸ்ட் இருக்கும் என்கிறார்கள்.
Recommended Video
செம ரோல்
விஜய் சேதுபதி முதல் பாதி முழுக்க மாஸ் காட்டி இருப்பார் . படம் முழுக்க காவி வேஷ்டி, மாலை அணிந்த கழுத்து, சிரிப்பு இப்படித்தான் விஜய் சேதுபதி வருவார். படத்தில் விஜய் சேதுபதி சொல்லும் ஒரு முக்கிய வசனம் பெரிய ஹிட் ஆகும் என்றும் கூறுகிறார்கள்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!