'பேட்ட'... பேரு மட்டுமில்ல... 'இதெல்லாமும்' அதிர வைக்கும்!

ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.

Recommended Video

பேட்ட...வெளியானது ரஜினி - கார்த்திக் சுப்புராஜ் பட டைட்டில்!- வீடியோ

சென்னை: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து முன்னணி இயக்குநர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த ரஜினி, கபாலி படத்தின் மூலம் அப்பெயரை மாற்றினார். தமிழ் சினிமாவில் இரண்டு மூன்று படங்களே கொடுத்த போதும், மக்கள் மனதில் இடம் பிடித்த இயக்குநர்கள் படத்தில் நடிக்கும் புதிய வழியைப் பின் பற்றத் தொடங்கினார்.

காலா எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், அடுத்ததாக அவர் மீண்டும் பழைய வெற்றிப்பட இயக்குநர்களுடன் கூட்டணி வைப்பார் எனக் கூறப்பட்டது. ஆனால், அது எது பற்றியும் கவலைப்படாமல் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்திற்கு பேட்ட எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தை மக்கள் அதிகம் எதிர்பார்க்க வேறென்ன காரணங்கள் உள்ளன எனப் பார்க்கலாம்.

ரஜினி படம்:

ரஜினி படம்:

நடிகர் ரஜினிக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. காரணம் அவரது படங்களில் முகம் சுளிக்க வைக்கும் ஆபாசக் காட்சிகள் மற்றும் வசனங்கள் இருக்காது என்பது தான். அதோடு அனைவரும் ரசிக்கும் வகையில் கதையோடு இணைந்த நகைச்சுவை காட்சிகளும் இருக்கும். ஆக்சன் படங்களான கபாலி, காலாவிலும் அது தவறாமல் இடம் பெற்றிருந்தது. நிச்சயம் -------- அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

கார்த்திக் சுப்புராஜ்:

கார்த்திக் சுப்புராஜ்:

தமிழில் இதுவரை நான்கு படங்களே கொடுத்துள்ள போதும், அவை அனைத்துமே வெவ்வேறு கதைக்களத்தில் மக்கள் ரசிக்கும் விதத்தில் இருந்தது. எனவே, நிச்சயமாக ரஜினியை வைத்து இயக்கும் இப்படம் வெறொரு வித்தியாசமான கதைக்களத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லனாக விஜய் சேதுபதி:

வில்லனாக விஜய் சேதுபதி:

விக்ரம்வேதா வெற்றியைத் தொடர்ந்து இப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. சமீபத்தில் தான் ரஜினியுடன் இவர் மோதும் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டது. நிச்சயம் இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பேசும்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்ரன், திரிஷா:

சிம்ரன், திரிஷா:

தமிழின் முன்னணி நாயகிகளாக கமல் உட்பட அனைத்து நாயகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர்கள் சிம்ரனும், திரிஷாவும். ஆனால், ரஜினி படத்தில் மட்டும் நடிக்கவில்லையே என்ற இவர்களது ஏக்கம் இப்படத்தின் மூலம் நிவர்த்தியாகியுள்ளது. வழக்கமாக இரண்டு நாயகிகள் கொண்ட ரஜினி படங்களில் ஒருவர் மிகவும் இளம் நாயகியாகவும், மற்றொருவர் மூத்த நாயகியாகவும் இருப்பர். ஆனால், இப்படத்தில் சிம்ரன், திரிஷா என இருவருமே மூத்த நடிகைகள் தான்.

நடிப்பு அசுரன் நவாசுதீன் சித்திக்:

நடிப்பு அசுரன் நவாசுதீன் சித்திக்:

நடிப்பு ராட்சசன் எனப் பெயரெடுத்தவர் பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. காலாவில் வில்லனாக நடித்த நானா படேகரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இப்படத்தில் நவாசுதீன் சித்திக் கதாபாத்திரமும் பேசப்படும் எனத் தெரிகிறது.

முதல் முறையாக அனிருத்:

ரஜினி படத்திற்கு முதன்முறையாக இளம் இசையமைப்பாளரான அனிருத் இசையமைக்கிறார். எனவே, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இளமைத் துள்ளலோடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபமாக அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ஹிட்டானது இங்கே குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சன் பிக்சர்ஸ்:

மீண்டும் சன் பிக்சர்ஸ்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் படத் தயாரிப்பு வேலைகளைத் தொடங்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் ஏற்கனவே ரஜினியின் எந்திரன் படத்தைத் தயாரித்திருந்தது. அந்த வரிசையில் இப்படமும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்பனிங் பாடல்:

ஓப்பனிங் பாடல்:

பெரும்பாலான படங்களில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி பாடுவது தான் வாடிக்கை. அப்படி எஸ்.பி.பி. பாடிய படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றன. இடையில் சில காலம் இந்தப் பாடல் கூட்டணி அமையவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ரஜினி படத்தின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாடுகிறார். பழைய வெற்றி செண்டிமெண்ட் இப்படத்திலும் வேலை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X