twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஷாந்த், திஷா மரணம்.. பிரேத பரிசோதனையில் எழுந்த சந்தேகம்.. 7 முக்கிய கேள்விகளுக்கு கிடைத்த விடை!

    |

    மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் அவரது மேனேஜரான திஷாவின் பிரேத பரிசோதனையும் அதுதொடர்பான அறிக்கையும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நிலையில் அதற்கான பதில்கள் வெளியாகியுள்ளன.

    Recommended Video

    Sushant Singh case Complications • Final Details

    பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேனேஜராக இருந்தவர் திஷா சலியான். சுஷாந்த் மட்டுமின்றி பல பாலிவுட் நடிகர்களுக்கும் மேனேஜராக இருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் காதலருடன் இருந்த அவர் மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு ஜூன் 14ஆம் தேதி நடிகர் சுஷாந்த் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    15க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள்.. கிராமி விருது வென்ற பியோன்ஸின் தயாரிப்பாளர் அதிரடி கைது15க்கும் மேற்பட்ட பலாத்கார வழக்குகள்.. கிராமி விருது வென்ற பியோன்ஸின் தயாரிப்பாளர் அதிரடி கைது

    மரணத்தில் மர்மம்

    மரணத்தில் மர்மம்

    இருவரின் மரணம், அவர்களின் பிரேத பரிசோதனை மற்றும் அது தொடர்பான அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சுஷாந்தின் குடும்பத்தினரும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ள நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் திஷாவின் பெற்றோரும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர்.

    மரணத்தில் மர்மம்

    மரணத்தில் மர்மம்

    இருவரின் மரணம், அவர்களின் பிரேத பரிசோதனை மற்றும் அது தொடர்பான அறிக்கை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சுஷாந்தின் குடும்பத்தினரும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ள நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் திஷாவின் பெற்றோரும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளனர்.

    முதல் கேள்வி

    முதல் கேள்வி

    இருவரின் மரணம் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகள் மூலம் எழுந்த 7 கேள்விகள் அவர்களின் மரணத்திற்கு பின்னணியில் ஏதோ மர்மம் உள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்துவதாக இருந்தது. இந்நிலையில் அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை மற்றும் போலீஸ் தரப்பில் தனியார் ஊடகத்திற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. அதன்படி முதலாவதாக, திஷா ஜூன் 9ஆம் தேதி அதிகாலை மரணமடைந்த நிலையில் அவரது உடல் ஏன் ஜூன் 11ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது என கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளித்த மும்பை காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இப்போது பிரேத பரிசோதனைக்கு, கோவிட் -19 சோதனை கட்டாயமாகும்.

    தாமதத்திற்கு காரணம்

    தாமதத்திற்கு காரணம்

    திஷாவின் உடல் உடனடியாக பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் கோவிட் -19 சோதனை செய்யப்பட்டது, அதன் ரிப்போர்ட் 24 முதல் 36 மணி நேரத்திற்குப் பிறகு வருகின்றன. அதுவரை, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் வைக்கப்பட்டிருந்தது என்றும் அவருக்கு கோவிட் -19 சோதனை நெகட்டிவ் என்று கூறிய பின்னர், திஷாவின் உடலின் பிரேத பரிசோதனை ஜூன் 11 அன்று நடத்தப்பட்டது என்றனர்.

    இரண்டாவது கேள்வி

    இரண்டாவது கேள்வி

    இரண்டாவதாக சுஷாந்தின் மேனேஜரான திஷாவின் பெண் உறுப்பில் இருந்த காயங்கள் குறித்த அறிக்கை எங்கே என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக தடயவியல் சோதனை நடைபெற்று வருவதாகவும் அதுகுறித்த அறிக்கையை மும்பை போலீசார் தடயவியல் துறையிடம் கேட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு..

    சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு..

    மூன்றாவதாக சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பிரேத பரிசோதனை ஜூன் 14 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஏன் நடத்தப்பட்டது; அவர் இறந்த அதே நாளில் ஏன் நடத்தப்பட்டது என்ற கேள்வியும் எழுந்தது. அதற்கு காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக பிரேத பரிசோதனை செய்யும்படி கூறினர். எனவே அது அந்த நேரத்தில் செய்யப்பட்டது. இரவில் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்ற விதி இல்லை. 2013 இல் வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கை இரவில் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அனுமதி தேவையில்லை

    அனுமதி தேவையில்லை

    நான்காவதாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு சுஷாந்தின் பிரேத பரிசோதனைக்கு ஒரு மாஜிஸ்திரேட் அங்கீகாரம் அளித்தாரா? என்ற கேள்வி எழுந்தது. காவல்துறை மரணம், கலவரம் போன்ற 176 சிஆர்பிசியின் கீழ் உள்ள வழக்குகளில் மட்டுமே ஒரு மாஜிஸ்திரேட்டின் அனுமதி தேவைப்படுகிறது. இந்த வழக்கு 174 சிஆர்பிசியின் கீழ் உள்ளது, அங்கு போலீசாருக்கு பிரேத பரிசோதனை செய்ய அதிகாரம் உள்ளது மற்றும் போலீஸ் விசாரணையின் படி, பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    குடும்பத்தினர் இருந்தார்களா?

    குடும்பத்தினர் இருந்தார்களா?

    ஐந்தாவதாக பிரேத பரிசோதனையின் போது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் இருந்தார்களாக என்ற கேள்வி எழும்பியது. அதற்கு மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட பதிலில், பிரேத பரிசோதனையின் போது உடன் இருந்தவர்களில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார் என்பது எங்களுக்கு நினைவில் இல்லை. அவரது சகோதரியின் கையெழுத்திட்ட அறிக்கையுடன் போலீசார் வந்து பிரேத பரிசோதனை கோரினர். பின்னர் தான் சுஷாந்தின் மைத்துனர், ஏ.டி.ஜி ஹரியானா போலீஸ் ஓ.பி. சிங் மற்றும் சகோதரி ஆகியோர் பிரேத பரிசோதனை மையத்திற்கு வந்தனர்.

    உடம்பில் காயங்கள்

    உடம்பில் காயங்கள்

    ஆறாவதாக சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தசையில் காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் ஏன் காயங்கள் இல்லை என்று ஏன் கூறப்படுகிறது? என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையின் 17வது வரிசையின்படி, தசையில் மார்க் இருந்ததே தவிர மற்ற எந்த காயங்களும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் பிரேத பரிசோதனை

    விரைவில் பிரேத பரிசோதனை

    கடைசியாக சுஷாந்தைப் போன்ற இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டால், பிரேத பரிசோதனைக்கு பொதுவாக 2-3 மணி நேரம் ஆகும். 90 நிமிடங்களில் எப்படி அவரது பிரேத பரிசோதனை முடிந்தது? என்ற கேள்வி இருந்தது. ஒரு பொது பிரேத பரிசோதனைக்கு குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் ஆகும், ஆனால் எந்த மரணத்துக்கும் இதுபோன்ற கால அவகாசம் இல்லை. ஒன்றரை மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்து, உடலை பரிசோதித்த பின்னர் உள்ளுறுப்புகளை பாதுகாத்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

    English summary
    Important questions about Sushant singh Rajput and Disha post mortem answred. Sushant singh rajput commit suicide on June 14. CBI probing his death case.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X