»   »  இம்சை, பைடூ- தடை நீக்கம்!

இம்சை, பைடூ- தடை நீக்கம்!

Subscribe to Oneindia Tamil

இம்சை அரசன் 23ம் புலிகேசி உள்ளிட்ட 8 படங்களுக்கு மத்திய தணிக்கைக் குழுஅனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திற்குதணிக்கை வாரியம் சான்றிதழ் தருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படம்வெளியாகவில்லை.

விலங்குகள் வதைத் தடுப்பு வாரியத்தின் அனுமதி கிடைத்தால்தான் படத்திற்குதணிக்கைச் சான்றிதழ் தர முடியும் என தணிக்கைக் குழு கூறி விட்டதால் இதைஎதிர்த்து ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந் நிலையில் இம்சைக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்த்து வைக்கக் கோரி நடிகர்வடிவேலு, முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

கருணாநிதியை சந்தித்த பின் வடிவேலு நிருபர்களிடம் கூறுகையில், படத்தைப்பார்த்து விட்டு தணிக்கைக் குழு அதிகாரிகள் விழுந்து விழுந்து சிரித்தனர். ஆனால்சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டனர். குதிரையைப் பயன்படுத்தியிருக்கிறோம்என்பதால் கொடுக்க முடியாது என்று கூறி விட்டார்கள்.

விலங்குகள் வதைத் தடுப்பு வாரியத்தின் தலைவர்தான் இதற்கு அனுமதி தரவேண்டுமாம். ஆனால் அந்த வாரியத்திற்கு இப்போது தலைவர் இல்லை,இனிமேல்தான் அவர் வர வேண்டுமாம்.

நாங்கள் படத்தில் குதிரையை கொடுமைப்படுத்தவில்லை. மிக அழகாகபயன்படுத்தியிருக்கிறோம். நிச்சயம், விலங்குகள் வதைத்தடுப்பு வாரியம் எங்களதுபடத்துக்கு அனுமதி தருவார்கள்.

இதுகுறித்து கலைஞரிடம் கூறியுள்ளேன். அவரும் கவனமாக கேட்டார். பலஇடங்களுக்கும் போன் போட்டுப் பேசினார். நல்லது நடக்கும் என நம்புகிறேன் என்றுகூறினார் வடிவேலு.

இச் சந்திப்பு நடந்தசில மணி நேரங்களில் இம்சை உள்ளிட்ட 8 படங்களுக்கான தடைநீக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன்கூறுகையில்,முதல்வரின் முயற்சியால் இம்சை அரசன், பைடூ உள்ளிட்ட 8படங்களுக்குரிய தடை நீக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தணிக்கை வாரியத்திடமிருந்து எங்களுக்குக் கடிதம்வந்துள்ளது. இதை தணிக்கைக் குழுவிடம் ஒப்படைத்துள்ளோம்.

எனவே விரைவில் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் கிடைத்து விடும். இதுகுறித்துதயாரிப்பாளர் ஷங்கரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil