»   »  வசூலில் ரஜினி, விஜய் படங்களை மிஞ்சிய இம்சை!

வசூலில் ரஜினி, விஜய் படங்களை மிஞ்சிய இம்சை!

Subscribe to Oneindia Tamil

வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசி அரங்கு நிறைந்த காட்சிகளாக மட்டும்ஓடாமல், படத்தின் பிளாக் டிக்கெட் விற்பனையும் அமோகமாக இருப்பதால் படத்தைவாங்கிய அத்தனை பேரும் படு சந்தோஷமாகியிருக்கிறார்களாம்.

வடிவேலு முதல் முறையாக நாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் இம்சைஅரசன் 23ம் புலிகேசி. இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்சை,வெளியே வருவதற்குள் படாதபாடு பட்டு விட்டது.

கடும் முயற்சிகளுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை தியேட்டர்களை எட்டிப்பார்த்தான் இம்சை.

திரையிட்ட நாள் முல் அரங்கு நிறைந்த காட்சிகளாக அமர்க்களப்படுத்தி வருகிறார்வடிவேலு.

சென்னையில் முதல் மூன்று நாளில் வசூலான தொகை, விஜய் படத்தின் வசூலைமிஞ்சியுள்ளதாம். சந்திரமுகி எடுத்த வசூலை சமன் செய்துவிட்டதாம். சொல்லிச்சொல்லி மகிழ்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம் போன்ற பெரியநிநகர்கள் அல்லாத ஒரு நடிகரின் படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் படு பிசியாகவிற்பனை ஆவது இப்போதுதான் என்றும் கூறுகிறார்கள்.

அந்த அளவுக்கு டிக்கெட் கிடைப்பது பெரும் சிரமமாக இருக்கிறது.

தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வரும் இம்சை, கிராமம்,நகரம் என எல்லாப் பக்கத்திலும் அரங்கு நறைந்த காட்சிகளாக ஓடி வருகிறதாம்.

சென்னையில் திரையிடப்பட்டுள்ள 6 தியேட்டர்களும் ஃபுல்லாக உள்ளன.படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்த பல தியேட்டர்கள் நான்குகாட்சிகளுக்குப் பதில் 5 காட்சிகள் வரை ஓட்டி வசூலை அள்ளி வருகிறார்கள்.

மாயாஜால் தியேட்டரில் 7 காட்சிகள் வரை இம்சையைப் போட்டு ரசிகர்களைகுஷிப்படுத்தி வருகிறார்கள்.

வடிவேலு பிறந்த மதுரை மண்ணிலும் இம்சைக்கு அலப்பறையான வரவேற்புகிடைத்துள்ளது.

இம்சை அரசன் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருப்பதால் குடும்பம்குடும்பமாக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர்.

இம்சைக்கு கிடைத்துள்ள வரவேற்பினால் சந்தோஷமடைந்துள்ள வடிவேலு தனதுசம்பளத்தை நைசாக உயர்த்தியிருக்கிறார். ஒரு நாளைக்கு இம்புட்டு (ரூ. 3 லட்சம்)என்று வாங்கி வந்த அவர் இப்போது இத்தனை மணி நேரத்துக்கு இம்புட்டு என்றுகூறும் அளவுக்கு சம்பளத்தை ஏத்தி விட்டாராம்.

வடிவேலு இப்படி சந்தோஷவேலுவாக மாறியுள்ள நிலையில் மறுபக்கம் படுடென்ஷனில் இருக்கிறார் விவேக். அவர் ஹீரோவாக நடித்த சொல்லி அடிப்பேன்படம் எப்போது வெளியாகும் என்று யாருக்குமே தெரியவில்லை.

படத்தை தயாரிப்பதில் நிதிப் பிரச்சினை குறுக்கிடவே படம் பாதியிலேயே கிடப்பில்போடப்பட்டது. பின்னர் அப்படி, இப்படி சரிக்கட்டி படத்தைத் தொடங்கினார்கள்.பின்னர் மறுபடியும் நன்று போனது.

விவேக் தனது சொந்தக் காசிலிருந்து 25 லட்சம் வரை கொடுத்தும் படம்முடியவில்லை. இம்சையுடன் சேர்ந்து சொல்லி அடிப்பேன் ரிலீஸாகும் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொன்னபடி அடிக்கத் தவறி விட்டார் விவேக்.

வடிவேலுவோ, சொல்லாமலேயே அடித்துத் இம்சை பண்ணிக் கொண்டிருக்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil