twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இம்சைக்கு கர்நாடகத்தில் இம்சை!

    By Staff
    |

    கன்னட வெறியர்களின் நெருக்கடியால், வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ம்புலிகேசி படத்திற்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வடிவேலுவின் அசத்தல் நடிப்பில், வெளியாகியுள்ள இம்சை அரசன் 23ம் புலிகேசி,உலகெங்கும் ரிலீஸ் ஆகிய வசூலை அள்ளி வருகிறது. கர்நாடகத்திலும் இப்படம்திரையிடப்பட்டுள்ளது.

    புலிகேசி கர்நாடகத்தைச் சேர்ந்த மன்னன். எனவே புலிகேசியை கேலி செய்வது போலஎடுக்கப்பட்டுள்ள இம்சை அரசனை கர்நாடகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும்என்று கன்னட ரக்ஷனா வேதிகே என்ற அமைப்பு கோரி வந்தது.

    இருப்பினும் பட போஸ்டர்களில் 23ம் புலிகேசி என்ற பெயரை மட்டும் எடுத்து விட்டுபடத்தை ரிலீஸ் செய்தனர்.

    ஆனாலும் விடாத பல்வேறு கன்னட அமைப்பினர், கர்நாடக திரைப்பட வர்த்தகசபைத் தலைவர் கங்கராஜுவை சந்தித்து உடனடியாக இப்படத்தைத் திரையிடுவதைதடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இவர்களைப் பகைத்துக் கொண்டால் படத்தை ஓட விடமாட்டார்கள், பல்வேறுசிக்கல்கள் வரும் என்பதை உணர்ந்த கங்கராஜுவும், படத்தை திரையிட விடாமல்தடுத்து விடுவதாக அவர்களுக்கு உறுதியளித்தார்.

    அதன்படி வியாழக்கிழமை மாலை முதல் இம்சை அரசன் கர்நாடகத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. பெங்களூரில் திரையிடப்பட்டிருந்த பூர்ணிமா, நடராஜ், அஜந்தா ஆகிய 3திரையரங்குகளிலும் ரசிகர் கூட்டம் அலைமோதியது, வசூலும் அமர்க்களாக இருந்தது.

    ஆனால் இதை பொறுக்க முடியாதவர்கள், கன்னட மன்னனைக் கேலி செய்துவிட்டார்கள், கலாச்சாரத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று பிட்டைப் போட்டுபடத்தைத் தடை செய்து விட்டனர்.

    ரஜினி ரசித்த இம்சை:

    இந் நிலையில் ரஜினிக்கு ஒரு ப்ரிவீயூ தியேட்டரில் இம்சை படம் போட்டுக் காட்டப்பட்டது. குடும்பத்தோடு வந்து படம் பார்த்த ரஜினி, விழுந்து விழுந்துசிரித்தாராம். படம் முடிந்து வீட்டுக்குப் போனவுடன் வடிவேலுக்கு போனைப் போட்டு, ஏய் வடிவேலு கலக்கிட்டப்பா.. படத்தை நினைச்சா இன்னும் சிரிப்புவருது என்று பாராட்டித் தள்ள, வடிவேலு அப்படியே உருகிவிட்டாராம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X