அதுக்குள்ள 15 வருஷம் ஆயிடுச்சா... என்றும் நம் நினைவுகளில் இம்சை அரசன் 23ம் புலிகேசி

சென்னை : வடிவேலுவின் இம்சையான காமெடி நடிப்பில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேலி.

இந்த படம் வெளியாகி நேற்றுடன் 15 ஆண்டுகளை கடந்துள்ளது. இதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் நினைவுகளை பகிர்ந்துள்ள படத்தின் இயக்குநர் சிம்புதேவன், புகைப்படங்களையும் இணைத்துள்ளார்.

2006ல் வெளியீடு

2006ல் வெளியீடு

வடிவேலுவின் காமெடி இம்சையில் கடந்த 2006ம் ஆண்டில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்ட ந்த படம் வடிவேலுவின் கேரியரில் மிகவும் சிறப்பான படமாக இருந்தது. படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காமெடியை இழைக்க விட்டிருந்தார் இயக்குநர் சிம்புதேவன்.

எவர்கிரீன் காமெடி

எவர்கிரீன் காமெடி

ஒரு மன்னனின் அறியாமை அவரை மட்டுமின்றி எவ்வாறு குடிமக்களையும் பாதிக்கும் என்பதை நகைச்சுவையுடன் தெரிய படுத்தியிருந்தார் சிம்புதேவன். இயக்குர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான இந்த படம் எப்போதும் எவர்கிரீன் காமெடி படமாக இருந்தது. மன்னர் காலத்து கதையானாலும் அதையும் தற்போதைய ரசிகர்களின் மன ஓட்டத்திற்கு தக்க இயக்கியிருந்தார்.

சிம்புதேவன் நன்றி

சிம்புதேவன் நன்றி

இந்நிலையில் இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகளை நேற்றுடன் கடந்துள்ளது. இதையொட்டி படத்தின் இயக்குநர் சிம்புதேவன் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் புகைப்படங்களை வெளியிட்டு நினைவுகளை பகிர்ந்துள்ளார். படம் குறித்து தோள் தொட்டு பாராட்டும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

புலி படம் இயக்கும் வாய்ப்பு

புலி படம் இயக்கும் வாய்ப்பு

மேலும் தயாரிப்பாளர் ஷங்கருக்கும் நடிகர் வடிவேலுவுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் என்றென்றும் தனது நன்றிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார். படத்தில் சிம்புதேவனின் திரைக்கதை உள்ளிட்ட விஷயங்கள் பிரமிப்பை ஏற்படுத்திய நிலையில் சிம்புதேவனுக்கு அடுத்ததாக விஜய்யின் புலி படத்தை இயக்கும் வாய்ப்பை இந்த படம் பெற்றுத் தந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X