இம்சைக்கு இம்சை: கருணாநிதியிடம் ஷங்கர் புகார்
இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்திற்கு சான்றிதழ் தருவது தொடர்பாக ஒருவாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று சென்சார் போர்டுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு ஹீரோவாக நடிக்க தயாரிக்கப்பட்டுள்ள படம் இம்சைஅரசன் 23ம் புலிகேசி.
இந்தப் படத்தில் ஏராளமான குதிரைகளைப் பயன்படுத்தியிருப்பதால் பிராணிகள் நலவாரியத்திடம் ஆட்சேபனை இல்லை சான்றிதழ் பெற வேண்டும். அப்போதுதான்தணிக்கைச் சான்றிதழ் தர முடியும் என தணிக்கை வாரியம் கூறி விட்டது.
ஆனால், பிராணிகள் நல வாரியம் படத்திற்கு ஆட்சேபனை இல்லை என்றசான்றிதழை தர முன்வரவில்லை.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஷங்கர் வழக்கு தொடர்ந்தார்.
பிராணிகள் நல வாரியம் சான்றிதழை தர முன் வரவில்லை. எனவே படத்திற்குசென்சார் போர்ட் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில்ஷங்கர் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தணிக்கைக் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தானம், ஒரு வாரம்அவகாசம் தருமாறு கோரினார்.
இதையடுத்து இன்னும் ஒரு வாரத்திற்குள் தணிக்கை சான்றிதழ் தருவது தொடர்பாகமுடிவெடுத்து உயர்நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு அடுத்தவாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தார்.
இந் நிலையில் இந்தப் படத்துக்கு விலங்குகள் நல வாரியத்தால் ஏற்பட்ட பிரச்சனை குறித்து படத்தின்தயாரிப்பாளர் ஷங்கரும், நடிகர் வடிவேலுவும் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர். படத்தின்பிரச்சனையைத் தீர்க்க உதவுவதாக கருணாநிதி உறுதியளித்தார்.


Click it and Unblock the Notifications