எப்போ வேணாலும் கம்பேக் ஆவேன்.. ஒரே மாதத்தில் இத்தனை அப்டேட்.. சிம்பு செம்ம பிஸி!

By Staff

சென்னை: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் வளர்ந்து ஹீரோவாக மாறியவர் தான் சிம்பு.

சினிமாவில் நூற்றில் ஒருவருக்கு இருக்கும் திறமை சிம்புவிடம் இருக்கிறது. நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பாடகர், எழுத்தாளர், நடன கலைஞர் போன்ற பன்முகம் கொண்டவர் தான் சிம்பு.

தனது அப்பா டி.ராஜேந்தர் முலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் சிம்பு. சுமார் பன்னிரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் சிம்பு.

In a span of one-month, Simbu had such updates and Announcements

இதன் பின் ஹீரோவாக தனது அப்பா டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தார் சிம்பு. இதன் பின்னர் பல படங்களில் நடித்து பல வெற்றிகளை குவித்து வந்தார் சிம்பு. இவரை அனைவரும் எஸ்.டி.ஆர் என்று தான் அழைப்பார்கள்.

கடந்த சில வருடங்களாக இவர் பல பிரச்சினைகளை சந்தித்து வந்தார். ஷூட்டிங் வருவதில்லை என்று பல தயாரிப்பாளர்கள் இவர் மேல் புகார் கொடுத்தனர். கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட மாநாடு இந்த வருடம் தான் மீண்டும் துவங்கியுள்ளது. இது போன்ற பல பிரச்சினைகளை பார்த்த இவர் இந்த வருடம் ஆரம்பத்தில் முதல் தினமும் இவரை பற்றிய செய்தி வந்து கொண்டு இருக்கிறது.

நியூயர் அன்று மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ஹன்சிகாவின் மஹா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் சிம்பு இடம் பெற்றிருந்தார். அடுத்து ஐந்தாம் தேதி இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மாநாடு படத்தை பற்றி புகைப்படம் ஒன்று வெளியிட்டார்.

ஆறாம் தேதி பிரபல கேலண்டருக்கு சிம்பு போட்டோஷுட் நடத்தினார். அடுத்த நாள் அதனை பற்றி அவரே கூறினார். இதனை அடுத்து கடந்த 14 ஆம் தேதி மாநாடு படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 16 ஆம் தேதி மாநாடு படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகியது.

இதற்கு அடுத்த நாள் 17 ஆம் தேதி அந்த போட்டோஷுட் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது. அடுத்த நாள் படத்தின் தயாரிப்பாளர் சிம்பு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டார். மாநாடு படத்திற்கு ரெடி ஆகி வருகிறார். இருபதாம் தேதி ரெயின்போ என்ற பாடல் அப்டெட் வெளிவந்தது. இதன் பின் 23 ஆம் தேதி இவர் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மஹா படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளிவந்தது. இதே நாளில் இவர் போட்டோஷுட் எடுத்த வீடியோ காட்சிகள் வெளியானது.

கடந்த திங்கட்கிழமை தொடங்கி தினமும் சிம்பு மஹா படத்தில் நடித்து வரும் புகைபடங்கள் சமுக வலை தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மஹா படக்குழு கடைசிகட்ட காட்சிகளை சிம்பு, ஹன்சிகா மற்றும் சனம் செட்டியை வைத்து படமாக்கி வருகின்றனர். ஒருகாலத்தில் இவரை கூறை கூறியவர்கள் எல்லாம் வாய் அடைத்து போகும் வகையில் இந்த வருடம் இருக்கபோகிறது. தினமும் சிம்பு ரசிகர்கள் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமுக வலை தளங்களை தெறிக்கவிட்டு வருகின்றனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X