புஷ்பா 2 படத்தில் இணையும் சாய் பல்லவி? வெயிட்டான கேரக்டராம்.. விரைவில் அறிவிப்பு!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது புஷ்பா படம்.
இந்தப் படம் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான வெற்றியை கொடுத்தது. வசூலிலும் மிரட்டியது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பணிகளில் இயக்குநர் சுகுமார் தற்போது பிசியாக காணப்படுகிறார்.

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியானது புஷ்பா படம். இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். சிகப்பு சந்தன மரங்களின் கடத்திலில் ஈடுபடும் கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
இந்தப் படத்தில் அவர் தன்னுடைய கெட்டப்பை மாற்றிக் கொண்டு, கரடுமுரடான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் மிகுந்த பலத்தை சேர்த்தது. மேலும் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.

வலிமையான 2வது பாகம்
இதில் ஸ்ரீவள்ளி மற்றும் சாமி பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. இதில் சாமி பாடலில் ராஷ்மிகாவின் நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக உள்ளதான இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாவது பாகத்தை மேலும் வலுவாக கொடுக்க சுகுமார் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.

வெயிட்டான கேரக்டரில் சாய் பல்லவி?
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திலும் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகா, சமந்தாவை தொடர்ந்து இந்தப் படத்தில் மேலும் ஒரு முன்னணி நடிகையும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது வேறு யாருமில்லை. நடிகை சாய் பல்லவிதான்.

பழங்குடியின பெண்ணாக சாய் பல்லவி?
இந்தப் படத்தில் பழங்குடி பெண் கேரக்டர் ஒன்று இருப்பதாகவும், மிகவும் வெயிட்டான அந்தக் கேரக்டரில்தான் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தில் விஜய் சேதுபதியும் இணையவுள்ளதாக கூறப்படும் நிலையில் இவை குறித்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











