விஜய் சேதுபதிக்கு பதிலாக ஹீரோவாக களமிறங்கும் சுந்தர் சி.. அரண்மனை 4 படத்தின் அப்டேட்!
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்ததாக அரண்மனை 4 திரைப்படம் உருவாகவுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் ஃபார்சி வெப் தொடர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

அரண்மனை 4 படத்தில் கமிட்டான விஜய் சேதுபதி
தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவிருந்த இந்தப் படத்தில் சந்தானமும் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி
இதுகுறித்த அறிவிப்புடன் புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அந்த நேரத்தில் படத்திற்கான கால்ஷீட்டை ஒதுக்க முடியாத நிலையில், விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஹீரோவாக களமிறங்கிய சுந்தர் சி
இந்நிலையில் படத்தின் சூட்டிங் குறிப்பிட்ட காலத்தில் துவங்கவுள்ளதாகவும் விஜய் சேதுபதியின் ரோலில் சுந்தர் சி நடிக்கவுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்கள்
சுந்தர் சி இயக்கத்தில் அடுத்தடுத்து அரண்மனை படத்தின் பாகங்களாக 3 படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து தற்போது அடுத்ததாக 4வது பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த 3 பாகங்களிலும் சுந்தர் சியும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான படங்களை கொடுக்கும் சுந்தர் சி
சுந்தர் சி அடுத்தடுத்த படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார். இயக்குநராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக அரண்மனை 4 படத்திற்கான வேலைகளை துவங்கியுள்ளார். இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை போலவே இந்தப் படமும் சிறப்பான விமர்னங்களையும் வசூலையும் பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











