பேச்சு பேச்சா இருக்கணும்.. நோ வயலன்ஸ்.. மண்டியிட்ட கோபி.. தலையில் அடித்துக்கொண்ட தாத்தா!
சென்னை : பாக்கியலட்சுமி தொடரில் கோபி கேரக்டரில் நடித்துவரும் சதீஷ், தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
இந்த கேரக்டரில் நெகட்டிவ் ஷேட் இருந்தாலும், அவருடைய நியாயத்தை அவ்வப்போது கேரக்டர் மூலம் வெளிப்படுத்திவருவதில் ரசிகர்கள் ஹாப்பி.
காலம் கடந்த காதல் மற்றும் அதையொட்டிய திருமணம் தொடர்ந்துவரும் பிரச்சினைகள் என அனைத்தையும் தன்னுடைய முக பாவனைகளால் ரசிகர்களுக்கு சிறப்பாக கடத்தி வருகிறார் கோபி.

பாக்கியலட்சுமி தொடர்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் சேனலின் முக்கியமான தொடராக மாறி டிஆர்பியிலும் முன்னணியில் தொடர்ந்து உள்ளது. இந்தத் தொடரில் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா என மூன்று கேரக்டர்களை மையமாக வைத்து அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகள், பிரச்சினைகள், காதல், சவால், புன்னகை, உறவுகள் என அனைத்தையும் சிறப்பான மிக்ஸாக கொடுத்து வருகிறார் இயக்குநர்.

நடிகர் கோபி
மூன்று வளர்ந்த பிள்ளைகளின் தகப்பனாக இருக்கும் கோபி, தாத்தாவாகும் வயதில் ஏற்படும் காதலை திருமணத்தில் முடிக்க பல்வேறு தகிடுதத்தங்களை செய்வதாக துவங்கி, தற்போது தன்னுடைய முதல் மனைவியிடம் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணமும் செய்துக் கொள்கிறார். இதையொட்டி இரு குடும்பங்களின் இடையில் சிக்கிக் கொண்டு கோபி படும் பாடுகளை அடுத்தடுத்த எபிசோட்களில் பார்க்க முடிகிறது.

கடுப்பில் கோபி
முதல் திருமணத்தை காட்டிலும் அதிகமான கனவுகளுடன் இரண்டாவது திருமணத்தை செய்துக் கொண்டார் கோபி. ஆனால் ஒரே வீட்டில் இருந்தாலும் அவருடன் சிறிது நேரம் கூட தனிமையில் கழிக்க முடியவில்லை என்பது அவருடைய வருத்தம். இதனிடையே, தன்னுடைய முதல் மனைவி பாக்கியா, தன்னுடைய வேலையில் தொடர்ந்து முன்னேற்றம் காண்பிப்பதும், வீட்டிற்காக 8 நாட்களில் 2 லட்சம் ரூபாயை கோபியிடம் நீட்டுவதும் கூட அவருக்கு கடுப்பை தந்துள்ளது.

குடித்துவிட்டு வரும் கோபி
மேலும் பழனிச்சாமியிடம் பாக்யா சிரித்து சிரித்து பேசுவதும் அவருக்கு மனஉளைச்சலை தருகிறது. தன்னுடைய நண்பரிடம் சொல்லி சொல்லி மாய்கிறார். தொடர்ந்து அடிக்கடி குடித்துவிட்டு வருவதால் ராதிகாவின் கோபத்தையும் சந்திக்கிறார். அவர் குடிப்பதற்கு ராதிகாதான் காரணம் என்று கோபியின் மகள் இனியா குற்றம் சாட்டுவதை அடுத்து, கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். இனி குடித்துவிட்டு வந்தால் தான் அவருடன் இருக்க மாட்டேன் என்றும் கூறுகிறார்.

பாக்யாதான் பெஸ்ட்
இதையெல்லாம் மனதில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்து குடித்துவிட்டு வரும் கோபி, பாக்யாதான் பெஸ்ட் என்று ராதிகாவிடமே கூறுகிறார். தான் குடித்ததற்கு ராதிகாதான் காரணம் என்றும் கூறாமல் கூறுகிறார். இதையடுத்து அடுத்தநாள் வெடிக்கிறது பிரச்சினை. ருத்ர தாண்டவம் ஆடுகிறார் ராதிகா. கோபத்தில் காபி கப்பை எடுத்து அடிக்க ஓங்குகிறார். அப்போது அதை தடுக்கும் கோபி, நோ வயலன்ஸ் பேபி, பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் என்று அதை தடுக்கிறார்.

மண்டியிடும் கோபி
இதையடுத்து அவரது காலில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். தொடர்ந்து உணர்ச்சி வசப்படும் ராதிகா, தான் ஏற்கனவே ஒரு குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்த நிலையில், நல்ல வாழ்க்கையை தருவதாக திருமணம் செய்துக் கொண்டு அதே வாழ்க்கையை தந்தால் எப்படி என்று கேள்வி எழுப்புகிறார். இதையெல்லாம் பார்க்கும் கோபியின் அப்பா, தலையில் அடித்துக் கொண்டு வருத்தப்படுகிறார்.


Click it and Unblock the Notifications











