twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக் பாஸ் சீசனில் யாருமே ஒழுங்கா விளையாடலை - கவிஞர் சிநேகன்

    |

    Recommended Video

    இந்த SEASON-ல இவங்க நல்லா விளையாடல | Snehan Exclusive Interview | Bigg Boss Tamil

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ல் யார் ஜெயிக்கணும்னு மக்கள் தான் முடிவு பண்ணுவாங்க. அவங்க சொல்றதை தான் நாம ஏத்துக்கணும். என்னைப் பொறுத்த வரையில் இந்த சீசன்ல யாருமே ஒழுங்க விளையாடலை என்ற சிநேகன் சாகும் வரைக்கும் கட்டிப்பிடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    அழகுங்குறது தேவையில்லாத ஒண்ணுன்னு தான் நம்ம எல்லாரும் நினைக்கிறோம். ஆனா அப்பிடி கிடையாது. அழகுங்குறது நம்பிக்கையோட இன்னொரு விஷயம். தான் அழகா இருக்கேன்னு நினைத்துக்கொண்டு, தன்னையே ரசிக்கும்போது தான் தன்னம்பிக்கை அதிகமாகும்.

    இப்ப நடந்துகிட்டு இருக்குற பிக் பாஸ் சீசன் 3ல் யார் ஜெயிக்கணும்கிறதை மக்கள் தான் முடிவெடுப்பாங்க. அவங்க என்ன முடிவெடுத்தாலும் நாம அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. நான் என்ன சொன்னாலும் அது நடக்கப்போறது கிடையாது. இதை ஏன் நம்ம தேவையில்லாம சொல்லணும் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக பேசினார் கவிஞர் சிநேகன்

    யார் டைட்டில் வின்னர்

    யார் டைட்டில் வின்னர்

    விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3, தற்போது பரபரப்பான கிளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று சொல்லாம். பிக் பாஸ் டைட்டில் வின்னரை தட்டிச் செல்வது யார் என்பது இன்னும் மூன்று வாரத்தில் தெரிந்து விடும்.

    கட்டிப்பிடி கவிஞர் சிநேகன்

    கட்டிப்பிடி கவிஞர் சிநேகன்

    இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 1ல் பங்கேற்று இறுதிவரை போராடி சில பல ஓட்டுகளில் வெற்றியை ஆரவ்விடம் பறிகொடுத்த, கட்டிப்பிடி வைத்தியத்தினால் புகழ்பெற்ற கவிஞர் சிநேகன் நமது ஃபிலிமி பீட்டுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் சொன்னதை நாம் இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    ஏய்.. நான் அழகா தான் இருக்கேன்

    ஏய்.. நான் அழகா தான் இருக்கேன்

    அழகுங்குறது தேவையில்லாத ஒண்ணுன்னு தான் நம்ம எல்லாரும் நினைக்கிறோம். ஆனா அப்பிடி கிடையாது. அழகுங்குறது நம்பிக்கையோட இன்னொரு விஷயம். தான் அழகா இருக்கேன்னு நினைத்துக்கொண்டு, தன்னையே ரசிக்கும்போது தான் தன்னம்பிக்கை அதிகமாகும். என்னை யாரும் குறை சொல்ல முடியாது, என்னோட ஆடை அலங்காரம் நல்லா இருக்கு, என்னோட கூந்தல் அழகா இருக்கு அப்பிடின்னு நினைக்கும்பொழுது தான் தன்னைப்பற்றிய நம்பிக்கை அதிகரிக்கும்.

    நாம நம்பணும்

    நாம நம்பணும்

    உண்மையிலேயே கண்ணாடியை கண்டு பிடித்தவன் ரொம்ப புத்திசாலி. நாம ஏன் கண்ணாடி முன் நின்றுகொண்டு நம்மைப் பார்த்து ரசிக்கிறோம். அதோடு ஒவ்வொரு மனிதனும் நம்பிக்கை பெறுவதற்கு முதல் தளமாக இருப்பதே கண்ணாடி தான். நாம அழகா இருக்கோம்னு நாம மொதல்ல நம்பணும், அடுத்தவங்களைப் பார்த்து எடை போடக்கூடாது.

    அதிகமான பெண் தோழிகள் கொண்டவன்

    அதிகமான பெண் தோழிகள் கொண்டவன்

    பத்து ஆண்கள்கிட்ட பழகுவதைக் காட்டிலும் ஒரு பொண்ணுகிட்ட பழகும்போது ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். இந்த சினிமா ஃபீல்டுக்கு வரும்போது கவிஞர்களிலேயே அதிகமா பெண் தோழிகள் உள்ள கவிஞன் இந்த சிநேகன் தான் என்பதை பகிரங்கமாகவே நான் சொல்லி இருக்கிறேன்.

    யாருமே சுயத்தை இழந்ததில்லை

    யாருமே சுயத்தை இழந்ததில்லை

    இருந்தாலும் கூடி, எந்தவொரு தோழியும் என்னால் அவர்களுடைய சுயத்தை இழந்ததில்லை. மரியாதையை, நம்பிக்கையை இழந்ததில்லை. அத்தனை தோழிகளின் அம்மாக்களுக்கும் நான் செல்லப் பிள்ளைதான்.

    கண்ணோடு கண் நோக்குதல்

    கண்ணோடு கண் நோக்குதல்

    பாசத்தை பகிர்ந்து கொள்வதற்கு மூன்று வழிகள் உள்ளன. கண்ணோடு கண் நோக்குவது ஒரு முறை. இல்லை, இவரோடு நான் இன்னும் நெருக்கமாக இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு கைகுலுக்கி பாசத்தை வெளிப்படுத்தி பகிர்ந்து கொள்வது மற்றொரு முறை.

    பாசத்தை பகிர்தல்

    பாசத்தை பகிர்தல்

    அப்படியும் இல்லாமல், நமக்குள் எந்தவித இன பேதமும் இல்லை, மத பேதமும் இல்லை, தாயைப் போல பிள்ளையும் பிள்ளையைப் போல தாயும் பாசப்பினைப்பு கொடுத்து பாசத்தை பகிர்ந்து கொள்வது. இது வரைமுறை, சட்டத்திற்கு உட்பட்டது.

    பாசப் பினைப்பை பழக்கியவன்

    பாசப் பினைப்பை பழக்கியவன்

    அதே நேரத்துல, நான் கண்ணை பார்க்கும்போது நீங்க கை நீட்டினீங்கன்னா, யார் குறைவான தூரத்துல இருக்காங்களோ அவங்களுக்கு தான் முன்னுரிமை, கண்ணுக்கு தான் முன்னுரிமை கொடுக்கணும். அப்படி இல்லாமல், நான் கை நீட்டும்போது, நீங்க ஹக் பண்ண விரும்புறீங்கன்னா, கை நீட்டுறவனுக்கு தான் முன்னுரிமை, சட்டமும் இதைத் தான் சொல்லுது. இப்படி சட்டதிட்டத்தோடு பாசப் பினைப்பை பழக்கியவன் நான். அப்படி இருந்தாலும், அதில் ஒரு கட்டொழுக்கம் இருந்தது.

    சாகும் வரை கட்டிப்பிடிப்பேன்

    சாகும் வரை கட்டிப்பிடிப்பேன்

    கிட்டத்தட்ட ஏழாயிரம் பேருக்கு ஒரு விழிப்புணர்வு தந்த இயக்கம் எங்களுடையது. இதை நான் கடந்த 2000வது ஆண்டிலிருந்தே பண்ணிக்கிட்டுருக்கேன். இதை நான் சாகும் வரைக்கும் பண்ணிக்கிட்டு இருப்பேன்.

    விக்க ஆரம்பிச்சுட்டாங்க

    விக்க ஆரம்பிச்சுட்டாங்க

    ஆனால், என்ன ஒன்று, பிக் பாஸ் வீட்டுல நமக்கு கொஞ்சம் ஃபோக்கஸ் (Focus) அதிகமா கிடைச்சதுனால, என்னை தப்பா புரிஞ்சிகிட்டாங்க. ஆஹா, சிநேகன் நல்ல விலைபொருள் ஆயிட்டானே, இவனை வித்தா நல்லா வியாபரம் நடக்கும்னு நினைச்சுகிட்டு எல்லாரும் என்னை விக்க ஆரம்பிச்சிட்டீங்க அவ்வளவுதான்.

    மக்கள் தான் முடிவெடுப்பாங்க

    மக்கள் தான் முடிவெடுப்பாங்க

    இப்ப நடந்துகிட்டு இருக்குற பிக் பாஸ் சீசன் 3ல் யார் ஜெயிக்கணும்கிறதை மக்கள் தான் முடிவெடுப்பாங்க. அவங்க என்ன முடிவெடுத்தாலும் நாம அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் என்ன சொன்னாலும் அது நடக்கப்போறது கிடையாது. இதை ஏன் நம்ம தேவையில்லாம சொல்லணும்.

    யாருமே ஒழுங்கா விளையாடலை

    யாருமே ஒழுங்கா விளையாடலை

    என்னைப் பொறுத்த வரையில், இந்த மூன்றாவது சீசனில் யாருமே ஒழுங்காக விளையாடவில்லை என்று தான் தோன்றுகிறது. அதனால நான் யாரையுமே ரெகமண்ட் பண்ண மாட்டேன் என்று கூறி விடைபெற்றார் சிநேகன்.

    English summary
    People will decide who can wins in season 3 of the Big Boss show. We just uphold what they say. For me, this season, nobody is playing properly, said Poet Snehan said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X