வந்தாரு.. தடவுனாரு.. போனாரு.. தினம் ஒரு சில்மிஷத்தில் கோலார்.. இந்த முறை யாரு தெரியுமா!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து 3வது வாரத்தில் நடைபோட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அடுத்தடுத்த டாஸ்க்குகளை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகமடையும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியின் கோளாறாக தொடர்ந்து போட்டியாளர் அசல் கோலார் இருந்து வருகிறார். பல்வேறு கண்டனங்களுக்கும் ஆளாகி வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 கடந்த 17 நாட்களாக தொடர்ந்து வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. தினந்தோறும் சிறப்பான எபிசோட்கள் மட்டுமின்றி நிகழ்ச்சியின் ப்ரமோக்களும் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது.

ரசிகர்களை ஈர்த்துவரும் நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 5 சீசன்களை காட்டிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் களமிறங்கிய நிலையில், இடையில் மைனா நந்தினியும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

மூன்றாவது வாரத்தில் பிக்பாஸ் சீசன் 6
தொடர்ந்து இரு வாரங்களை கடந்து தற்போது மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. இந்த இரு வாரங்களில் டான்ஸ் மாஸ்டர் சாந்தி எலிமினேட் ஆகியுள்ளார். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரபல யூடியூபர் ஜிபி முத்து வெளியேறியுள்ளார். இவர் பைனல் போட்டியாளராக நிகழ்ச்சியில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய மகனை பார்க்க வேண்டும் என்று கூறி இடையிலேயே வெளியேறியுள்ளார்.

அசல் கோலாரின் சில்மிஷம்
இதனிடையே தினந்தோறும் பல டாஸ்க்குகளுடன் பரபரப்பான எபிசோட்களை நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் கோளாறாக காணப்படுகிறார் அசல் கோலார். இவர் நிகழ்ச்சியின் அனைத்து பெண் போட்டியாளர்களிடமும் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்.

ரசிகர்கள் கமெண்ட்
ஆயிஷா, ஜனனி என இவர் தன்னுடைய சில்மிஷத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். இவர் தடவாத பெண்களே பிக்பாஸ் வீட்டில் இல்லை என்பதே நடைமுறையாக உள்ளது. இவருக்கு இதையொட்டி ஏதாவது மனநலக் கோளாறு இருக்குமோ என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் கோரிக்கை
கோலாரிடம் சக பெண் போட்டியாளர்கள் இதுகுறித்து சண்டை போட்டாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கருமமே கண்ணாக உள்ளார். இவரை போட்டியிலிருந்து நீக்க வேண்டும், தொகுப்பாளர் கமல் இதுகுறித்து கண்டிக்க வேண்டும் என்றெல்லாம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மீண்டும் சில்மிஷம்
இதனிடையே தற்போது ஜனனி, ரச்சிதா உள்ளிட்டவர்களிடம் முக்கியமாக ஏதோ பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அங்கே வரும் கோலார், அவரை பின்புறம் தடவிவிட்டு, வந்த வேலை முடிந்ததாக அங்கிருந்து நகர்கிறார். இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களின் கண்டனத்தை பெற்றுள்ளது. முன்னதாக அவர் ஜனனியிடம் இதே போல சேட்டையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











