என்ன ஜனனி, தனலட்சுமி மட்டும்தான் செஞ்சாங்களா.. வழக்கம் போல் நழுவிய அசீம், நிவாஷினி!

சென்னை : பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே குக்கிங், கிளீனிங் என 4 குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டியாளர்கள் அந்த டாஸ்க்குகளை செய்து வருகின்றனர்.

நிகழ்ச்சி இன்றைய தினம் 19வது நாளை எட்டியுள்ள நிலையில், நித்தம் ஒரு பிரச்சினை, நித்தம் ஒரு டாஸ்க் என நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

அடுத்தடுத்த ப்ரமோக்களாலும் ரசிகர்களை விஜய் டிவி ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த 9ம் தேதி சிறப்பான துவக்க விழாவுடன் ரசிகர்களை சந்தித்த நிகழ்ச்சி இன்றைய தினம் 19ம் நாளை எட்டியுள்ளது. துவக்கம் முதலே அடுத்தடுத்த டாஸ்க்குகள், சச்சரவுகள், சண்டைகள் என நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

4 குழுக்கள்

4 குழுக்கள்

இந்த நிகழ்ச்சியின் துவக்க நாளிலேயே 20 போட்டியாளர்களும் 4 குழுக்களாக பிரிந்து, குக்கிங், கிளினிங் என தங்களது வேலைகளை பகிர்ந்து கொண்டனர். இதனால் சாப்பாடு உள்ளிட்ட விஷயங்கள் தடையின்றி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் காபி உள்ளிட்டவற்றிற்கும் கட்டுப்பாடுகள் போடப்பட்டன.

கிளீனிங்கை செய்யும் ஜனனி, தனலட்சுமி

கிளீனிங்கை செய்யும் ஜனனி, தனலட்சுமி

இதனிடையே கிளினிங் குழுவில் ஜனனி, தனலட்சுமி, நிவாஷினி, அசிம் உள்ளிட்டவர்கள் இருக்கும் நிலையில், ஜனனி மற்றும் தனலட்சுமியே இந்த குழுவில் அதிகமாக செயல்பட்டு வருகின்றனர். அசீம் மற்றும் நிவாஷினி தங்களது வேலைகளை சரிவர செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு துவக்கம் முதலே இருந்து வருகிறது.

எஸ்கேப்பாகும் அசீம் -நிவாஷினி

எஸ்கேப்பாகும் அசீம் -நிவாஷினி

அசீம் சக போட்டியாளர்களிடம் சண்டை போடுவதிலும் என்டர்டெயின்மெண்ட் செய்வதிலுமே தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருகிறார். இதனிடையே நிவாஷினி அசல் கோலாரிடம் பேசிக் கொண்டும் ரொமான்ஸ் செய்துக் கொண்டும் பொழுது போக்கி வருகிறார். இதனால் கிளினிங் டீமில் அவர்களுக்கும் சேர்த்து ஜனனி மற்றும் தனலட்சுமியே வேலை செய்வது தொடர்கிறது.

ரசிகர்கள் கண்டனம்

ரசிகர்கள் கண்டனம்

இதன் வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து அசீம் மற்றும் நிவாஷினியின் செயல்பாடுகளுக்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மற்ற டீம்களில் அனைவரும் இணைந்து செயல்படும் நிலை காணப்படுகிறது. ஆனால் அசீம் மற்றும் நிவாஷினி தங்களது பொறுப்புகளை தட்டிக் கழித்துவருவது ரசிகர்களின் கண்டனத்தை உருவாக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X