Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
கதிரவனுக்கு ஓட்டு அள்ளப் போகுது.. டான்சுக்கு ரசிகர்கள் கமெண்ட்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 58வது நாளை எட்டியுள்ளது.
வித்தியாசமான டாஸ்க்குகளால் தொடர்ந்து என்டர்டெயின் செய்துவரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பாராட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை தொடர்ந்து பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் நிகழ்ச்சியை பார்க்கும் ஆவலை ரசிகர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது.
இரவு பார்ட்டியில் பிக்பாஸ் பிரபலங்கள்..இணையத்தில் தீயாய் பரவும் போட்டோஸ்!

58வது நாளில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 58வது நாளை எட்டி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. இதுவரை 5 சீசன்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ள நிலையில் தற்போது 6வது சீசனில் களைகட்டி வருகிறது. 20 போட்டியாளர்களுடன் களமிறங்கிய இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்த எபிசோட்களில் எலிமினேட் சுற்றுகளில் போட்டியாளர்களை வெளியேற்றி வருகிறது.

போட்டியாளர்கள் மும்முரம்
கடந்த வாரத்தில் குயின்சி எலிமினேட் ஆன நிலையில், தற்போது தங்களை எலிமினேட்டிலிருந்து காப்பாற்றிக் கொள்ள போட்டியாளர்கள் தொடாந்து பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக களமிறங்கிய ஜிபி முத்து இறுதிப் போட்டியாளராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தன்னுடைய குடும்பத்தை காரணம் காட்டி இடையிலேயே விலகிக் கொண்டார்.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்
தொடர்ந்து லைல்ட் கார்ட் சுற்றில் மைனா நிகழ்ச்சியில் இணைந்தார். தொடர்ந்து விவாதங்கள், அடிதடி சண்டைகள், சிறப்பான பேச்சுகள், ஏச்சுகள், குற்றச்சாட்டுகள், வம்பிழுத்தல்கள் என இந்த நிகழ்ச்சி களைக்கட்டி வருகிறது. நிகழ்ச்சியை ரசிகர்களை பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர். நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளிலும் 3 ப்ரமோக்கள் வெளியாகி வரும் நிலையில், ரசிகர்களின் கமெண்ட்களை ஒவ்வொரு ப்ரமோக்களிலும் பார்க்க முடிகிறது.

களைகட்டிய கதிரவன் நடனம்
இன்றைய தினம் நிகழ்ச்சி 58வது நாளை எட்டியுள்ள நிலையில், தற்போது 3வது ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது பர்பார்மென்ஸ்களை வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான கெடடப்புகளில் காணப்படுகின்றனர். இதில் போட்டியாளர் கதிரவன், மங்கை நிலாவின் தங்கை என்ற பாடலுக்கு சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினார். அவரது நடனம் பிரபுதேவாவிற்கே டப் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது.

ரசிகர்கள் சூப்பர் கமெண்ட்
இந்த நடனத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு சிறப்பான கமெண்ட்களை அளித்தனர். இந்தப் ப்ரமோ எந்தவிதமான டாக்சிக்கும் இல்லாமல் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கதிரவனுக்கு வோட் அள்ளப் போகுது என்றும் ஒரு ரசிகர்கள் கமெண்ட் அளித்துள்ளார். மேலும் கதிரவன் எப்போதும் மற்ற போட்டியாளர்களை மோட்டிவேட் செய்யவும் கைத்தட்டல் செய்யவும் தயங்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

கதிரவன் -ஆயிஷா ப்ராக்டீஸ்
மேலும் இந்த டாஸ்க்கிற்காக நள்ளிரவில் கதிரவன் மற்றும் ஆயிஷா இணைந்து பயிற்சி செய்த வீடியோவும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. என் ஆசை மைதிலியே என்ற பாடலுக்கும் இருவரும் இணைந்து ஆடிய ஆட்டம் வேறு லெவலில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விக்ரமன் வயித்தெரிச்சல்
முன்னதாக கதிரவன் மைக்கேல் ஜாக்சன் டான்சை ஒழுங்காக செய்ய மாட்டார் என்று விக்ரமன் கூறிய நிலையில், கதிரவன் மீது அவருக்கு அப்படி என்ன வயித்தெரிச்சல் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கதிரவன் தன்னுடைய டான்சில் கொன்னுட்டார் என்றும் இத்தகைய திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் டாஸ்க்குகள் இல்லாமல் எப்போதும் அடிதடியாக போவது ஏன் என்றும் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.