மைனாவை தர லோக்கல் என்று திட்டிய ஜிபி முத்து.. அப்படி என்னதான் பண்ணாரு!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 20 போட்டியாளர்கள் மற்றும் சிறப்பான டாஸ்க்குகளுடன் களைகட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் அதிரடி வரவாக மைனா நந்தினி நுழைந்துள்ளார். இதையொட்டி முன்னதாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோவும் வெளியிட்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் திடீரென நுழைந்தாலும் இவர் அனைத்து போட்டியாளர்களிடமும் இயல்பாக மற்றும் சகஜமாக பழகி வருவது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இரண்டாவது வாரத்தில் சிறப்பான டாஸ்க்குகளை சேர்த்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னதாக 20 போட்டியாளர்கள் களமிறங்கி முதல் நாளில் இருந்தே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஜிபி முத்து, தனலட்சுமி, ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

 முதல் போட்டியாளர்

முதல் போட்டியாளர்

இதனிடையே முதல் போட்டியாளராக நிகழ்ச்சியில் நுழைந்த ஜிபி முத்து சக போட்டியாளர்களிடம் போட்டியையும் பொறாமையையும் ஏற்படுத்தினாலும் தன்னுடைய எளிமையான செயல்பாடுகள் மூலம் அவர்களை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல் வாரத்தில் ஜிபி முத்துவை வைத்து கலாய்ப்பது அவரிடம் சண்டையிடுவது என சக போட்டியாளர்கள் நடந்துக் கொண்டனர்.

அதிரடியை நிரூபிக்கும் ஜிபி முத்து

அதிரடியை நிரூபிக்கும் ஜிபி முத்து

ஆனால் இரண்டாவது வாரம் துவக்கம் முதலே தன்னுடைய அதிரடியை நிரூபித்து வருகிறார் ஜிபி முத்து. சாந்தி, ஜனனியுடன் சேர்ந்து நிகழ்ச்சியின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் ஈடுபட்ட இவர், பிரம்மாண்டமான கடிகாரத்தில் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் தொங்கி அதில் வெற்றிப் பெற்று பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக மாறியுள்ளார்.

அடுத்தடுத்து வெற்றி

அடுத்தடுத்து வெற்றி

இதையடுத்து டான்ஸ் போட்டியிலும் ஏடிகேவுடன் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். யூடியூபராக மற்றவர்களை வட்டார வழக்கில் திட்டி அதன்மூலம் வரவேற்பு பெற்ற இவர், தற்போது டான்சிலும் கலக்கியுள்ளது ரசிகர்களை குறிப்பாக அவரது ஆர்மியை வெகுவாக உற்சாகப்படுத்தியுள்ளது.

வம்பிழுத்த மைனா நந்தினி

வம்பிழுத்த மைனா நந்தினி

இதனிடையே தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் மைனா நந்தினி சாப்பிட்டுக் கொண்டிருக்க பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார் ஜிபி முத்து. அப்போது சாப்பாட்டில் காரம் மிகுதியால் தன்னுடைய மூக்கிலிருந்து தண்ணீர் ஊற்ற, அதை பக்கத்தில் இருந்த ஜிபி முத்துவின் சட்டையில் துடைக்கிறார் மைனா நந்தினி.

தரை லோக்கல் என திட்டிய ஜிபி முத்து

தரை லோக்கல் என திட்டிய ஜிபி முத்து

இதனால் அருவருப்பான ஜிபி முத்து சீ.. மோசமான ஆளாக இருக்காங்க என்று திட்டியபடி தன்னுடைய சட்டையை கழட்டிவிட்டு, தரை லோக்கல் என்றும் மைனா நந்தினியை கூறுகிறார். இதையடுத்து சிரித்தபடி தன்னுடைய ட்ரெஸ் புதுசு என்றும் அதில் தன்னுடைய மூக்கை துடைக்க முடியாது என்றும் காரணம் சொல்கிறார் மைனா நந்தினி.

வெறுப்பேற்றிய மைனா

வெறுப்பேற்றிய மைனா

கேப்டனாக மாறியதில் இருந்து ஜிபி முத்துவின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. இதையொட்டி அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மைனா நந்தினி ஜிபி முத்துவை இப்படி வெறுப்பேற்றியுள்ளார். இதன் வீடியோவை ரசிகர்கள் தற்போது ஜிபி ஆர்மியில் பகிர்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X