வம்பிழுத்த தனலட்சுமி.. வெளுத்து வாங்கிய கேப்டன் ஜிபி முத்து.. நெருப்புடா!

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்தடுத்த சிறப்பான டாஸ்க்குகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

துவக்கம் முதலே டீம்களாக பிரிந்து போட்டியாளர்கள் அடுத்தடுத்த செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக மாறியுள்ளார் ஜிபி முத்து. இதற்காக கடிகாரத்தில் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் தொங்கினார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களை போலவே இந்த சீசனிலும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அனைத்து போட்டியாளர்களிடம் நகைச்சுவையாகவும் வம்பிழுப்பதைப் போலவும் கண்டிப்பைக் காட்டியும் அவர் தொடர்ந்து நிகழ்ச்சியை வழி நடத்தி வருகிறார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

இடையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவர்தான் துவங்கி வைத்தார். ஆனால் தன்னுடைய விக்ரம் படத்தின் சூட்டிங் பாதிப்பதாக கூறி இடையிலேயே விலகினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார். அவரது தொகுப்பு சிறப்பாக இருந்தாலும் 24 மணிநேரம் நேரலையாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ரசிகர்களை அதிகமாக கவரவில்லை.

பிரம்மாண்டமாக துவங்கிய நிகழ்ச்சி

பிரம்மாண்டமாக துவங்கிய நிகழ்ச்சி

இதனிடையே தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது. முதல் வாரத்தை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டாவது வாரத்தில் நடைபோட்டு வருகிறது. கமல்ஹாசன் கடந்த வாரயிறுதிப் போட்டியில் பங்கேற்று 40வது நாளில் நடைபெறவேண்டிய சம்பவங்கள் 4வது நாளிலேயே நடைபெறுவதாக பாராட்டினார்.

முதல் வாரத்திலேயே அதிரடி

முதல் வாரத்திலேயே அதிரடி

இதற்கு ஏற்பவே முதல் நாளிலேயே 4 குழுக்களாக பிரிந்து செயல்பட்டனர் போட்டியாளர்கள். இந்த வேலைகளை செய்யும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, கோபம் போன்றவற்றை சக போட்டியாளர்களிடம் அதிகமாக காட்டினர். தனலட்சுமி -ஜிபி முத்து இடையிலும் சண்டை வெடித்தது. இதையடுத்து ஜிபி முத்துவையே அழவைத்தார் தனலட்சுமி.

ஜிபி முத்துவின் அடுத்தடுத்த வெற்றி

ஜிபி முத்துவின் அடுத்தடுத்த வெற்றி

இதையடுத்து தற்போது புதிய உற்சாகத்துடன் இரண்டாவது வாரத்தில் நடைபோட்டு வருகிறார்கள் ஹவுஸ்மேட்ஸ். இதில் கேப்டன் டாஸ்க், நடன டாஸ்க்குகளை வெற்றி கொண்டு பட்டையை கிளப்பியுள்ளார் ஜிபி முத்து. மேலும் கடந்த வாரத்தில் தனலட்சுமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அழுத அவர், தற்போது பாயும் புலியாக மாறியுள்ளார்.

தனலட்சுமியை விரட்டிய ஜிபி முத்து

தனலட்சுமியை விரட்டிய ஜிபி முத்து

சமையல் செய்யும் இடத்தில் மணிகண்டனுடன் மறுபடியும் வாக்குவாதத்தில் ஈடுபட முயற்சி செய்தார். தனலட்சுமி. இதனிடையே அங்கு வந்த கேப்டன் ஜிபி முத்து, அவரை விரட்டினார். சமையல் செய்யும் நேரத்தில் எதற்கு வாக்குவாதம், அவரது வேலை என்ன என்பது போல பேசினார்.

கேப்டனாகவே மாறிய ஜிபி முத்து

கேப்டனாகவே மாறிய ஜிபி முத்து

சும்மா உட்காரும்போது இத்தகைய வாக்குவாதங்களை வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தற்போது சமையலை கவனியுங்கள் என்றும் அவர் தனலட்சுமியை விரட்டினார். அதற்கு தனலட்சுமி ஏதோ சொல்ல வர, தேவையில்லாமல் பேசுவதை விட்டுவிட்டு காய்கறிகளை வெட்டுமாறும் கூறினார்.

பணிந்து போன தனலட்சுமி

பணிந்து போன தனலட்சுமி

கடந்த வாரத்தில் சக போட்டியாளராக ஜிபி முத்துவிடம் வாக்குவாதம் செய்து, அவர் நடிப்பதாக கூறி அவரை அழவைத்து அவரது ஆர்மியினரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் தனலட்சுமி. ஆனால் தற்போது கேப்டனான ஜிபி முத்து அவரை விரட்டியதும் பணிந்துப் போனார். இது ஜிபி முத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X