மனிதாபிமானம் வராத ஜிபி முத்து.. ஐயோ பாவம் கமலே கன்ஃபியூஸ் ஆயிட்டாரு!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டு இன்றைய தினம் 7வது நாளை எட்டியுள்ளது.
இதையொட்டி தினந்தோறும் விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தொடர்ந்து கலக்கல் ப்ரமோக்களை வெளியிட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தொடர்ந்து ரசிகர்களை கவரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான மற்றும் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தவர் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்துக் கொள்ள முயலும் தனிமனிதனின் ஆவலை மையமாக கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியின் வெற்றியே பலதரப்பட்ட இடங்களில் இருந்து ஒன்று சேரும் போட்டியாளர்களை ஒரே இடத்தில் 100 நாட்கள் தங்க வைத்து அவர்களுக்குள் ஏற்படும் கோப தாபங்களை, சண்டைகளை போட்டிகளை ஒருங்கிணைப்பதுதான். இந்த 100 நாட்களில் சிலருக்குள் மோதலும் சிலருக்குள் காதலும் வருவதும் இந்தப் போட்டியின் சிறப்பு.

7வது நாளை எட்டிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கி தற்போது 7வது நாளை எட்டியுள்ளது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி குறித்த அடுத்தத்த ப்ரமோக்களை விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெளியிட்டு தொடர்ந்து ரசிகர்களை எதிர்பார்ப்புடனேயே இருக்க வைத்து வருகிறது.

வீடியோக்களை பகிரும் ரசிகர்கள்
மேலும் இந்த நிகழ்ச்சியின் பலவிதமான நிகழ்வுகளும் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிகளை பார்க்க முடியாதவர்களும் இந்த வீடியோக்களால் அதிகமாக கவரப்பட்டு சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்வதும் நடந்து வருகிறது.

சிறப்பான போட்டியாளர் ஜிபி முத்து
இந்த நிகழ்ச்சியின் சிறப்பான போட்டியாளராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஜிபி முத்து. பிக்பாஸ் வீட்டில் அவரது செயல்பாடுகளால் கவரப்பட்டுள்ள ரசிகர்கள் அவருக்கு ஆர்மியையும் உருவாக்கி பிக்பாஸ் வீட்டில் அவரது செயல்பாடுகள் குறித்த வீடியோக்களையும் யூடியூபராக முன்னதாக அவர் வெளியிட்ட பல வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் வீடியோக்கள்
அந்த வகையில் நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரிடமும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் மிகவும் கலகலப்புடன் பேசினார். இதுகுறித்த பல வீடியோக்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன. நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் நடந்த பலதரப்பட்ட விஷயங்கள் குறித்து அவர் விவாதித்தார்.

ஜனனிக்கு இரண்டு ஃபிளாக்
இதனிடையே மனிதாபிமானத்துடன் தான் மற்ற டீம்களுக்கு செய்த உதவியை கண்டித்த ஜனனிக்கு ஜிபி முத்து ரெட் ஃபிளாக் கொடுத்தார். இதன்போது மனிதாபிமானம் என்ற வார்த்தை வராமல் அவர் தடுமாறினார். இதை கவனித்த கமல்ஹாசன் அந்த வார்த்தையை அவர் ரிப்பீட் செய்யுமாறு கேட்டார்.

மனிதாபிமானம் வராமல் தடுமாற்றம்
அந்த வார்த்தை வராமல் தடுமாறிய ஜிபி முத்து ஒரு கட்டத்தில் ஐயய்யோ அது வராதே என்று கூறி பின்பு, மனிதாபிமானம் என்று கூறினார். இதையடுத்து பிக்பாஸ் குடும்பத்தினர் அனைவரையும் சிரிப்புக் கடலில் மூழ்கடித்தார். இந்த வார்த்தையை கேட்டு குழப்பமடைந்த கமல்ஹாசன், அதுவும் நல்லாத்தான் இருக்கு என்றும் போகப்போக சரியாகிவிடும் என்றும் சமாதானம் கூறிக்கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











