ஜாலி மூடுக்கு மாறிய பிக்பாஸ் டீம். ரஜினி ஸ்டைலில் அலப்பறை செய்த அமுதவாணன்!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி மிகப்பெரிய துவக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் முதல் நாளிலேயே வித்தியாசமான டாஸ்குகளுடன் போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

முக்கியமாக நிகழ்ச்சியின் முதல் போட்டியாளர் ஜிபி முத்து தன்னுடைய செயல்பாடுகள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி துவங்கி தற்போது இரண்டு நாட்களை கடந்துள்ளது. மொத்தமாக 20 போட்டியாளர்ள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும 4 குழுக்களாக பிரிந்து டாஸ்க்குகளை நிறைவேற்றி வருகின்றனர். ஒவ்வொருவரும் ரசிகர்களை கவரும்வகையில் சிறப்பான செயல்பாட்டை செய்து வருகின்றனர்.

4 குழுக்கள்.. 4 டாஸ்க்குகள்

4 குழுக்கள்.. 4 டாஸ்க்குகள்

குக்கிங், க்ளீனிங் என 4 டாஸ்க்குகளில் 4 குழுக்களாக போட்டியாளர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். முதல் நாளிலேயே ஆட்டம் பாட்டத்துடன் இந்த நிகழ்ச்சி துவங்கியது. எங்க ஏரியா உள்ள வராத என்று போட்டியாளர்கள் போட்ட ஆட்டம் மற்றும் அதை தொடர்ந்த உற்சாகம் ரசிகர்களையும் தொற்றிக் கொண்டது.

நேரலையில் ஒளிபரப்பு

நேரலையில் ஒளிபரப்பு

தினந்தோறு விஜய் டிவியில் இரவு 9.30 மணிக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாகவும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஜிபி முத்துவின் கள்ளம் கபடமற்ற செயல்பாட்டை வைத்து சக போட்டியாளர்கள் கலாய்த்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

கலகலப்பான ஜிபி முத்து

கலகலப்பான ஜிபி முத்து

இதனிடையே எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாமல், தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஜிபி முத்து, இவர் மழையில் போட்ட ஆட்டம், காலை உணவுக்கு முன்பு பாடிய கல்யாண சமையல் சாதம் பாடல் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவருக்காக ரசிகர்கள் தற்போதே ஆர்மிக்களை துவக்கியுள்ளனர்.

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஜிபி முத்து

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஜிபி முத்து

தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் ஜிபி முத்து உள்ளார். இதனிடையே காலையில் பிக்பாஸ் டீம் ஜாலியான மூடில் இருந்தது. நிகழ்ச்சியில் ராப் பாடகர்கள் தங்களது பாட்டை துவங்கினர். அமுதவாணன் தனியாக பாடல்களை பாடி பட்டையை கிளப்பி வருகிறார். இன்றைய தினம் ரஜினி ஸ்டைலில் பாடல்களை பாடி கலாய்த்தது அனைவரையும் கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X