கமலுக்கே டஃப் கொடுக்கும் ஜிபி முத்து.. நயன்தாரா, சிம்ரனுடன் நடிக்க விருப்பம்!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 7வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அனைவரிடம் பேசி வருகிறார்.

இன்றைய தினம் வெளியாகியுள்ள புதிய ப்ரமோவில் கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியில் அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன் 6 அமைந்துள்ளது. 40வது நாளில் நடைபெற வேண்டிய பரபரப்பு 4வது நாளிலேயே நடைபெற்றுள்ளதாக நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனே கூறுமளவிற்கு இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பான வகையில் நடைபெற்று வருகிறது.

குழுக்களாக செயல்பட்ட போட்டியாளர்கள்

குழுக்களாக செயல்பட்ட போட்டியாளர்கள்

முதல் நாளிலேயே நிகழ்ச்சியின் 20 போட்டியாளர்களும் 4 குழுக்களாக பிரிந்து நான்கு டாஸ்க்குகளில் ஈடுபட்டனர். குக்கிங், கிளீனிங் என பிரிந்து செயல்பட்டனர். இவர்களை வழிநடத்த ஒவ்வொரு டீமிலும் ஒரு ஹெட் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குள் கருத்து மோதல்களும் அதிகமாகவே காணப்பட்டது.

7வது நாளில் பிக்பாஸ் சீசன் 6

7வது நாளில் பிக்பாஸ் சீசன் 6

நிகழ்ச்சி துவங்கி இன்றைய தினம் 7வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் இந்த ஒரு வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகமான சண்டைகள், கோபங்கள், பிரச்சினைகள், வாக்குவாதங்கள் உள்ளிட்டவற்றை போட்டியாளர்கள் சந்தித்து வருகின்றனர்.

கூலாக செயல்பட்ட ஜிபி முத்து

கூலாக செயல்பட்ட ஜிபி முத்து

இந்த நிகழ்ச்சியின் முக்கியமான போட்டியாளராக ஜிபி முத்து மாறியுள்ளார். இவர் முதல் போட்டியாளராக இந்த நிகழ்ச்சியில் நுழைந்த நிலையில், இவரிடம், தனலட்சுமி, ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்கள் சண்டையிட்ட நிகழ்வுகளும் காணப்பட்டன. இதையடுத்து நிகழ்ச்சியில் மிகவும் கூலாக செயல்பட்ட ஜிபி முத்துவே ஒரு கட்டத்தில் கண்கலங்கிய சம்பவமும் நடைபெற்றது.

சுவாரஸ்யமாக போகும் நிகழ்ச்சி

சுவாரஸ்யமாக போகும் நிகழ்ச்சி

இதனிடையே போட்டியாளர்களிடம் தொகுப்பாளர் கமல்ஹாசன் தொடர்ந்து பேசி வருகிறார். இதன் ப்ரமோக்களை விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தொடர்ந்து ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. நேற்றைய தினம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருந்தது நிகழ்ச்சி.

கமல்ஹாசனின் கலகலப்பான பேச்சு

கமல்ஹாசனின் கலகலப்பான பேச்சு

இதனிடையே 7வது நாளான இன்று நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் ஜிபி முத்துவிடம் கமல்ஹாசன் மிகவும் கலகலப்பாக பேசுவதை காண முடிகிறது. அவருக்கு நிகழ்ச்சியில் பிக் பாக்ஸ் பரிசாக அளிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் ஆரம்பத்தில் இருந்து கேட்டுவந்த முருங்கைக்காய் உள்ளிட்டவையும் கிடைப்பதாக அந்த ப்ரமோவில் காணப்படுகிறது.

ஜிபி முத்துவை கவர்ந்த நாயகிகள்

ஜிபி முத்துவை கவர்ந்த நாயகிகள்

இதையடுத்து ஜிபி முத்து இணைந்து நடிக்க விரும்பும் இரண்டு கதாநாயகிகள் குறித்து அசீம் கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து வெளியில் வந்து தனக்கே வேட்டு வைக்க ரெடியாகிறாரா என்று கமல்ஹாசன் நகைச்சுவையுடன் கேட்கிறார். இதையடுத்து பிக்பாஸ் வீடே அதிர்கிறது.

நயன்தாரா, சிம்ரனுடன் நடிக்க விருப்பம்

நயன்தாரா, சிம்ரனுடன் நடிக்க விருப்பம்

ஆனாலும் ஜிபி முத்து அசராமல் தான் நயன்தாரா மற்றும் சிம்ரனுடன் இணைந்து நடிக்க விரும்புவதாக கூறுகிறார். தொடர்ந்து ஜிபி முத்துவிடம் அடுத்த கேள்வியை பற்ற வைக்கிறார் கமல்ஹாசன். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் எந்த இருவரை ஹீரோயினாக அவர் தேர்ந்தெடுப்பார் என்று கேட்கிறார். அதற்கு முழிக்கிறார் ஜிபி முத்து. அவர் யாரை தேர்ந்தெடுத்திருப்பார் என்ற ஆவலை இந்த ப்ரமோ ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X