பிக்பாஸ் வீட்டுக்குள் புகுந்த வெண்கல பானை.. அசீமை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடந்த 9ம் தேதி துவங்கியுள்ளது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலேயே ஆட்டம் பாட்டத்துடன் டாஸ்க்குகளையும் போட்டியாளர்கள் துவங்கிவிட்டனர்
இதனிடையே இன்றைய தினம் சண்டையும் துவங்கியுள்ளது. இதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கி தற்போது 6வது சீசனில் நுழைந்துள்ளது. கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகம் செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்.

20 போட்டியாளர்கள்
ஆண், பெண், திருநங்கை என 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, இவர்கள் நேற்றைய தினம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சியை துவக்கினர். எங்க ஏரியா உள்ள வராத என்ற பாட்டுக்கு இவர்கள் அனைவரும் இணைந்து ஆட்டம் போட்டது அனைவரையும் கவர்ந்தது.

4 குழுக்களாக டாஸ்க்
இதையடுத்து 4 குழுக்களாக பிரிந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் சமையல், கிளீனிங் என தங்களுக்கான டாஸ்க்குகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிற்கும் லீடர்களையும் பிக்ஸ் செய்து இந்த நிகழ்ச்சி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நுழைந்த ஜிபி முத்து தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

ஜிபி முத்துவிற்கு ஆர்மி
இவருக்கு ரசிகர்கள் ஆர்மிக்களை துவங்கிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. தொடர்ந்து இவரை ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் பார்க்க முடிந்தது. கள்ளம் கபடமில்லாத இவரது செயல்பாடுகள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. முதல் நாளில் பதட்டமாக காணப்பட்ட இவர், அடுத்த நாளிலேயே அனைவருடனும் சகஜமாக பழக ஆரம்பித்து விட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெண்கல பானை
இதனிடையே இவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் மட்டம் தட்டும் முனைப்பில் இறங்கியுள்ளார் அசீம். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வெண்கல பானை என்று ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அசீமின் வளவளவென்ற அளவிற்கு அதிகமான பேச்சு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறது.

போட்டியாளர்களை வெறுப்பேற்றும் அசீம்
மேலும் அனைத்து விஷயங்களிலும் இவர் தலையிட்டு போட்டியாளர்களை வெறுப்பேற்றி வருவதும் அனைவரையும் எரிச்சலடைய செய்துள்ளது. இன்றைய தினம் வெளியான ப்ரமோவில் மகேஸ்வரி, சிவின் கணேசனுடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நிகழ்ச்சியின் முதல் சண்டைக்கும் வித்திட்டார்.


Click it and Unblock the Notifications











