சிறையில் தள்ளி ஜனனியை புலம்பவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி.. நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக மாறியுள்ளது பிக்பாஸ் சீசன் 6.

இந்த நிகழ்ச்சியில் முக்கியமான பல நிகழ்வுகளால் போட்டியாளர்கள் தொடர்ந்து ரசிகர்களை என்கேஜ் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து சிறப்பான பல டாஸ்குகளால் இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் இரண்டாவது வாரத்தின் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் செயல்படாமல் இருந்தவர்களும் இந்த வாரத்தில் சிறப்பான செயல்பாடுகளால் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தவர்களும் இந்த வாரத்தில் வீறு கொண்டு எழுந்துள்ளனர். இதன்மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜிபி முத்து உள்ளிட்டவர்கள் கடந்த வாரத்தில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் இந்த வாரத்தில் விக்ரமன் உள்ளிட்டவர்கள் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளனர்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

பல விஷங்களில் விக்ரமன் நியாயமாக குரல் கொடுத்து வருவதாகவும் அவரை அடக்க ஜிபி முத்து உள்ளிட்டவர்கள் முயற்சி செய்வதாகவும் ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர். நிகழ்ச்சியில் ஜிபி முத்து தொடர்வாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தன்னுடைய குடும்பத்தை மிஸ் செய்வதாகவும் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முற்றிய அசீம் -ஆயிஷா சண்டை

முற்றிய அசீம் -ஆயிஷா சண்டை

இதனிடையே இன்றைய தினம் தன்னை வாடி போடி என்று பேசிய அசீமிடம் மல்லுக் கட்டினார் ஆயிஷா, இருவரிடையேயும் சண்டை முற்றிய நிலையில், தன்னுடைய செருப்பை கழற்றி அடிக்கப் போனார். இதனால் பெரிய பிரச்சினை வெடித்தது. இதனிடையே இந்த சண்டையை அடுத்து சிறையில் ஜனனி மற்றும் ராம் இருவரும் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைபட்ட ஜனனி -ராம்

சிறையில் அடைபட்ட ஜனனி -ராம்

இந்த அறிவிப்பை பிக்பாஸ் செய்தார். அடுத்த அறிவிப்பு வரும்வரை இவர்கள் இருவரும் சிறையில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். யாரோ சண்டை போட்ட நிலையில் தன்னை ஏன் சிறையில் அடைத்தனர் என்று ஜனனி சிறையில் இருந்தடி புலம்பினார். அதற்கு ராமும் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார்.

ரசிகர்கள் வருத்தம்

ரசிகர்கள் வருத்தம்

அடுத்தடுத்து டான்ஸ் டாஸ்க்குகளால் இந்த நிகழ்ச்சி களைகட்டிய நிலையில் தற்போது ஜனனி மற்றும் ராம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அவர்களது ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ஜனனியை போலவே அவர்களும் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். ஆள் கிடைக்காததால்தான் தங்களை உள்ளே அடைத்துள்ளார்களா என்று ராமும் கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X