Don't Miss!
- News
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த இந்தியா.. 9வது இடத்தை பிடித்தது
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போது முடியும்.. கணக்கு போட்ட விக்ரமன் -ரச்சிதா.. ஏங்க போர் அடிச்சுடுச்சா?
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 56வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர் போட்டியாளர்கள்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கமல்ஹாசனும் தன் பங்கிற்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகிறார்.
எனக்கு
புறம்பேசும்
புத்தி
கண்டிப்பாக
இருக்கு..
ஒப்புக்
கொண்ட
மைனா..
பிக்பாஸ்
ப்ரமோவில்
சுவாரஸ்யம்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். விக்ரம் பட சூட்டிங்கையடுத்து முன்னதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிய நிலையில், நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்
இதையடுத்து 6வது சீசனை அவர் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு மிகச்சிறந்த அடையாளத்தை தந்த கமல் தொடர்ந்து 6வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையிலும் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

போட்டியாளர்களின் பங்களிப்பு
இந்த நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில் ஜிபி முத்து வெளியேற, சில போட்டியாளர்கள் எலிமினேட் ஆனார்கள். மைனா நந்தினி வைல்ட் கார்ட் சுற்றில் பிக்பாஸ் வீட்டிற்குள் என்டர் ஆனார். ஜிபி முத்து இல்லாத குறையை அனைத்து போட்டியாளர்களும் தங்களின் சிறப்பான பங்களிப்பு மூலம் சரி செய்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.

நட்பு பாராட்டும் போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் அடிதடி வரை பார்த்துவிட்டனர் ஹவுஸ்மேட்ஸ். நிகழ்ச்சியின் அடுத்தடுத்த டாஸ்க்குகள், வாக்குவாதங்கள், குற்றம் குறைகள், ஒற்றுமை உள்ளிட்டவை அனைத்தும் உள்ள நிலையில், சாவகாசமாக நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் நிகழ்ச்சியின் இடையில் பேசிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டும் அதே வேளையில் நட்பு பாராட்டவும் போட்டியாளர்கள் தயங்குவதில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு குறித்து விவாதம்
இதனிடையே இன்றைய தினம் 56வது நாளை நிகழ்ச்சி எட்டியதையடுத்து நிகழ்ச்சி எப்போது நிறைவடையும் என்று விக்ரமன் மற்றும் ரச்சிதா இருவரும் கணக்கு போட்டதையும் பார்க்க முடிந்தது. பொங்கல் நேரத்தில் இந்த நிகழ்ச்சி முடியும் என்று ரச்சிதா தெரிவித்தார். இதையடுத்து நவம்பரில் எத்தனை நாட்கள் என்றும் இருவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

முட்டியை வைத்து கணக்கிட்ட ரச்சிதா
நாம் சிறுவயதில் கணக்கு போடுவது போல, கைகளின் முட்டிகளை வைத்து ஜனவரி, பிப்ரவரி என கணக்கு போட்ட ரச்சிதா, நவம்பரில் 30 நாட்கள் தான் என்று ஒரு முடிவுக்கு வந்தார். இதையடுத்து டிசம்பரில் 31 நாட்கள் என்றும் இருவரும் கணக்குப் போட்டு, இதையடுத்து ஜனவரி 21ம் தேதி தான் நிகழ்ச்சி நிறைவடையும் என்று ஒரு முடிவுக்கு வந்தனர்.

சலிப்பை ஏற்படுத்தியதா நிகழ்ச்சி?
இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன அதற்குள்ளாக நிகழ்ச்சி அவர்களுக்கு சலிப்பை கொடுத்து விட்டதா, நிகழ்ச்சியை விட்டு வெளியேற நினைக்கிறார்களா என்று கமெண்ட் செய்ய துவங்கிவிட்டனர். தினந்தோறும் சூப்பர் சாப்பாடு, அடிதடி என சிறப்பாக அவர்களுக்கு காலம் சென்றபோதிலும், அவர்களுடைய குடும்பத்தை அவர்கள் மிஸ் செய்வார்கள்தானே என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.