Bigg Boss 7 - கருவுல இருக்குற குழந்தை மாதிரி பண்றார்..பிக்பாஸ் வீட்டில் கூல் சுரேஷை கலாய்க்கும் போட்டியாளர்கள்
சென்னை: Bigg Boss Tamil (பிக்பாஸ் தமிழ்) பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டிருக்கும் கூல் சுரேஷை சக போட்டியாளர்கள் கலாய்க்க ஆரம்பித்திருக்கின்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா, விஷ்ணு விஜய், ஐஷு, அனன்யா ராவ், பவா செல்லதுரை, ஜோவிகா விஜயகுமார், யுகேந்திரன், சரவண விக்ரம், விஜய் வர்மா, மாயா, அக்ஷயா உதயகுமார் ஆகிய 18 பேர் வீட்டுக்குள் சென்றிருக்கின்றனர்.

இரண்டு வீடுகள்: இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. இதுதொடர்பான விளக்கத்தை நேற்றே கமல் ஹாசன் துவக்க விழாவில் விளக்கியிருந்தார். அதாவது ஒவ்வொரு வாரத்திலும் கேப்டனை கவராத ஆறு போட்டியாளர்கள் இந்த சின்ன வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்கள் அந்த வீட்டை விட்டு வெளியே செல்லவே கூடாது என்பதுதான் விதி.
இந்த வாரம் யார்: முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் உள்ளே நுழைந்தார். அடுத்தடுத்து போட்டியாளர்களும் நுழைந்தனர். இந்த வார கேப்டனாக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது கேப்டன்சியை பார்த்த ரசிகர்கள் ஓரளவு ஓகே தான் என்று கூறிவருகின்றனர். மேலும் சக போட்டியாளர்களுக்கு தேவையான பொருட்களை பிக்பாஸிடம் தொடர்ந்து கேட்டு பெற்றுக்கொடுத்தது நல்லபடியாக இருந்ததாக ரசிகர்கள் கூறினர்.
சின்ன வீடு: புதிய ரூல்ஸ்படி தன்னை கவராத பவா செல்லதுரை, நிக்ஸன், அக்ஷயா, ரவீனா, ஆயிஷா, வினுஷா ஆகிய ஆறு பேரை தேர்ந்தெடுத்தார் விஜய். அவர்கள் ஆறு பேரும் சின்ன வீட்டுக்கு சென்றிருக்கின்றனர். அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வரும்வரை அவர்களுடன் பிக்பாஸ் பேசப்போவதில்லை. இதற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த ரூல்ஸ் நல்லா இருக்கே என கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

கூல் சுரேஷ் அட்வைஸ்: இந்நிலையில் இன்று காலை மற்ற போட்டியாளர்களைவிட கூல் சுரேஷ் தாமதமாகவே எழுந்தார். எழுந்ததும் வீட்டுக்கு வெளியே வாக்கிங், ஜாக்கிங் செய்தார். மேலும் இன்னொரு இடத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு கை, கால்களை அசைத்தபடி உடற்பயிற்சி செய்தார். அதனை பார்த்த மாயா, என்ன இவர் கருவுல இருக்குற குழந்தை மாதிரி உடற்பயிற்சி செய்கிறார் என்று கமெண்ட் அடித்து சென்றார். நல்ல வேளை அதை கூல் சுரேஷ் கவனிக்கவில்லை.
அதனையடுத்து கேமராவை பார்த்து பேசிய அவர், "இளைஞர்களே எனக்கு 45 வயது ஆகிறது. நான் உடற்பயிற்சி செய்யுற மாதிரி சீன் எல்லாம் போடவில்லை. எப்போதுமே நான் காலையில் இப்படி செய்வேன். உடலுக்கு நல்லது. நீங்கள் ஜிம் போயி செய்ய வேண்டும் என்பது அல்ல. காலையில் எழுந்து வாக்கிங்கோ இல்லை ஜாக்கிங்கோ செல்லலாம். எனது அப்பா 87 வயதுவரை உயிருடன் இருந்தார். அதற்கு காரணம் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை அவர் தினமும் வாக்கிங் செல்வார். இப்போது உடல் உழைப்பு குறைந்துவிட்டது. அதனால் உடற்பயிற்சி செய்யுங்கள்""என்றார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னது நம்ம கூல் சுரேஷா இவர் இவ்வளவு சீரியஸா பேசுறாரே என அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே கூல் சுரேஷ் எப்போதும் பொறுமையாகவே இருக்கிறார். அதேசமயம் சக போட்டியாளர்களான மணிசந்திராவும் விஷ்ணுவும் கூல் சுரேஷை ஒரு ஃபன் மெட்டீரியலாகவே பார்க்க ஆரம்பித்திருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனவே சுரேஷ் வீட்டுக்குள் எப்படி இனி வரும் நாட்களில் செயல்படப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











