அச்சச்சோ.. செம சண்டை.. பாலாஜிக்காக மல்லுக்கட்டிய ஷிவானி.. கிழித்துவிட்ட கேபி.. ஷாக்கில் ஹவுஸ்மெட்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஷிவானிக்கும் கேபிக்கும் பெரும் சண்டை நடைபெறுவது இன்றைய இரண்டாவது புரமோவின் மூலம் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியும் பாலாஜியும் நெருக்கமாக இருப்பதும், அவர்களுக்குள் ஒரு காதல் ட்ராக் செல்வதும் ஊரறிந்த கதை.

என்னதான் ஷிவானியை தான் காதலிக்கவில்லை என்று பாலாஜி சொன்னாலும் அவர்களுக்குள்ளான நெருக்கம் குறையவில்லை.

அண்ணன் தங்கையாக ரொமான்ஸ்

அண்ணன் தங்கையாக ரொமான்ஸ்

ஷிவானியும் சரி பாலாஜியும் சரி ஒருவரையொருவர் பிரிவதே இல்லை. நேற்றைய டாஸ்க்கில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் அண்ணன் தங்கை கேரக்டர் ஆனால் அப்போதும் அவர்கள் தங்களின் ரோலை மறந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தனர்.

இரண்டாவது புரமோ

இரண்டாவது புரமோ

இதனை பார்த்த நெட்டிசன்கள் இருவரையும் துப்பாத குறையாக கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது.

ஹானஸ்ட்டா பதில் சொல்லு

ஹானஸ்ட்டா பதில் சொல்லு

அதில் கேபிக்கும் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இதில் கேபி, பாலாஜியிடம் நான் ஹானஸ்ட்டா பதில் சொல்லுன்னு சொன்னேன், நீ சொல்லிட்ட.. அதுக்குப்புறம் நான் ஒன்னுமே பண்ணலயே என்கிறார்.

நீ எதுக்கு பேசுற..

நீ எதுக்கு பேசுற..

அப்போது உள்ளே புகும் ஷிவானி, ஹானஸ்ட்டா எதுக்கு பதில் சொல்லணும் என பாலாஜிக்கு ஆதரவாய் கேபியிடம் மல்லுக்கட்டுகிறார். இதனால் டென்ஷனாகும் கேபி, நீ எதுக்கு பேசுற, நான் அவன்கிட்ட கேட்குறேன், அவன் பதில் சொல்றான் என ஷிவானியிடம் குரலை உயர்த்துகிறார்.

சமாதானம் செய்யும் பாலாஜி

சமாதானம் செய்யும் பாலாஜி

தொடர்ந்து பேசும் ஷிவானியிடம் யார் சொன்னாங்களோ அவங்கக்கிட்ட போய் கேளு, என்கிட்ட வராதே என்கிறார் கேபி. அப்போது இருவருக்கும் இடையில் கையை நீட்டியப்படி சமாதானம் செய்கிறார் பாலாஜி.

என்ன பண்ணுவ?

என்ன பண்ணுவ?

ஆனாலும் சண்டை தொடருகிறது. என்கிட்ட வாய்ஸ் ரைஸ் பண்ணாதே என்கிறார் கேபி. அதற்கு நீதான் முதலில் வாய்ஸ் ரைஸ் பண்ண என ஷிவானி சொல்ல, ஆமாம் வாய்ஸ் ரைஸ் பண்ணுவேன்.. என்னா பண்ணுவ இப்போ.. என கேபி கேட்க அதை எதிர்பார்க்காத ஷிவானி ஷாக்காகிறார்.

சண்டையால் ஷாக்

சண்டையால் ஷாக்

ஷிவானிக்கும் கேபிக்கும் இடையே நடைபெறும் சண்டையால் மொத்த ஹவுஸ்மெட்ஸும் செம ஷாக்காகின்றனர். அப்போது ரியோ, நான் ஒரு விஷயம் சொல்லவா என கேட்டு வெல்கம் டூ பிக்பாஸ் சீசன் 4 என கூற அர்ச்சனா நிஷா என அவர்கள் கேங்க் சிரித்து மகிழ்கிறது. இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.

கடுப்பில் உள்ள கேபி

கடுப்பில் உள்ள கேபி

முதலில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்தது கேபிதான். கேபிக்கு பாலாஜி மீது ஒரு க்ரஷ் இருந்தது. ஆனால் பாலாஜிக்கு ஷிவானி மீதுதான் க்ரஷ். ஷிவானியும் பாலாஜியும் நெருங்கி பழகி வருகின்றனர். அதனாலேயே இருவர் மீதும் கடுப்பில் உள்ளார் கேபி.

வச்சு செய்த கேபி

வச்சு செய்த கேபி

இந்நிலையில் இன்று வாண்ட்டடாக வந்து கேபியின் வண்டியில் ஏறினார் ஷிவானி. இதனை பயன்படுத்திக் கொண்ட கேபி மொத்த கோபத்தையும் இறக்கி ஷிவானியை வச்சு செய்து விட்டார். இதனை பார்த்த நெட்டிசன்கள், ஷிவானிக்கு இது தேவையில்லாத ஆணி என தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X