கோப்ரா பட பிரமோஷன்ஸ்.. அனைவரையும் சொக்க வைத்த மிருணாளினி ரவி!
சென்னை : விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ளது கோப்ரா படம்.
Recommended Video
இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பிரமோஷன் டூரில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சியில் ஆரம்பித்த இந்தப் பயணம் மதுரை, கோவை, ஐதராபாத் என நீண்டு வருகிறது.

கோப்ரா படம்
நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது கோப்ரா படம். இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

20க்கும் மேற்பட்ட கெட்டப்புகள்
படத்தில் 20க்கும் மேற்ப்பட்ட கெட்டப்புகளில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இந்த கெட்டப்புகளின் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே படத்தின் டீசர், பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவையும் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்களை காத்திருக்க வைத்துள்ளது.

பிரமோஷன் டூர்
இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ள இந்தப் படத்தின் பிரமோஷனை படக்குழு முடுக்கி விட்டுள்ளது. படத்தின் பிரமோஷன் டூர் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பிரமோஷன் துவங்கப்பட்டு தொடர்ந்து மதுரை, கோவை, ஐதராபாத் என பல இடங்களில் பிரமோஷன் நடத்தப்பட்டது.

ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு
சென்ற இடங்களில் எல்லாம் படக்குழுவினருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி உள்ளிட்டவர்களும் இந்த பிரமோஷனில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்களுடன் படக்குழு உரையாடிய நிகழ்வுகளும் நடைபெற்றன.

ரசிகர்களை கவர்ந்த மிருணாளினி ரவி
இந்நிலையில் இந்தக் குழுவுடன் இணைந்த மிருணாளினி ரவி சிறப்பான காஸ்ட்யூமுடன் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக காணப்படும் இவர் பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், கோப்ரா ப்ரமோஷன்களிலும் அனைவரையும் வசீகரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











