Director Lokesh: எல்சியூவில் அடுத்தடுத்த நடிகர்களை இணைக்கும் லோகேஷ்.. அட இவங்கல்லாம் இருக்காங்களா?

சென்னை: மாநகரம் என்ற படம்மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

தொடர்ந்து கார்த்தி, விஜய், கமல் என அடுத்தடுத்த மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் விஜய்யுடன் லோகேஷ் இரண்டாவது முறையாக இணைந்த லியோ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

In Director Lokesh Kanagarajs LCU some more actors are expected to join

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: வங்கி ஊழியராக இருந்த எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்தவர் லோகேஷ் கனகராஜ். பின்புலம் மட்டுமில்லாமல் உதவி இயக்குநர் என்ற அனுபவமும் இல்லாமல்தான் இவரது திரையுலக பிரவேசம் அமைந்தது. இதுவெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். முதலில் சில குறும்படங்களை இயக்கி அதன்மூலம் சினிமாவையும் இயக்கினார்.

அடுத்தடுத்த வெற்றிகள்: முதல் படமான மாநகரம் படத்திலேயே அனைவரையும் தன்னை நோக்கி பார்வையை செலுத்த வைத்தார். முதல் படத்திலேயே அடுத்தடுத்து தான் சிறப்பான நடிகர்களை இயக்கும் வல்லமை படைத்தவன் என்பதையும் நிரூபித்தார். மாநகரம் படத்தை தொடர்ந்து கார்த்தியை வித்தியாசமான ஜானரில் கைதி படத்தில் நடிக்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். சாக்லேட் மற்றும் அதிரடி நாயகனாக நடித்துவந்த கார்த்தியை சிறையிலிருந்து தண்டனை முடிந்து வெளியே வரும் கைதியாக காட்டும் தைரியம் இருந்தது லோகேஷுக்கு.

3வது படத்திலேயே விஜய்யுடன் கூட்டணி: இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காதவகையில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இந்தப் படத்தின் அதிரிபுதிரி வெற்றி நேரடியாக விஜய்யிடம் லோகேஷை கொண்டு சேர்த்தது. கோலிவுட்டில் பல இயக்குநர்கள் முப்பது ஆண்டுகளாக விஜய்யை இயக்க தவமிருக்க தன்னுடைய மூன்றாவது படத்திலேயே அந்த வாய்ப்பை பெற்றார் லோகேஷ். மாஸ்டர் என்ற இந்தப் படத்தில் சுத்தமான பழக்கங்கள் கொண்ட வில்லனையும், குடிபோதையுடன் திரியும் விஜய்யையும் துணிச்சலுடன் கேரக்டர்களாக்கினார்.

கமலுடன் விக்ரம் படம்: இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் கமலை தாத்தாவாக்கி அழகு பார்த்தார். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை இன்டஸ்ட்ரியல் ஹிட்டாக்கினார். இந்தப் படத்தில் இவர் கொடுத்த LCU இணைப்புகள் படத்திற்கு அதிகமான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது. இந்த LCU தமிழ் சினிமாவின் புதிய முயற்சியாக ரசிகர்கள் அதிகமாக யோசிக்க வைத்தது.

லோகேஷின் LCU: இது இப்படியா, அது அப்படியா என்று ரசிகர்கள் கூட்டம் போட்டு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் குறித்து யோசித்து தள்ளினர். இந்நிலையில் தற்போது லியோ படத்திலும் இந்த யுக்தி பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு முன்பு, அந்த அளவிற்கு இந்தப்படத்தில் அதன் வரவேற்பு இருக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய யூனிவர்சில் அடுத்தடுத்த நடிகர்களை லோகேஷ் இணைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

LCUவில் அடுத்தடுத்த நடிகர்கள்: தற்போது தன்னுடைய LCU குறித்து குறும்படமும் எடுத்துள்ளார் லோகேஷ். இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய LCUவில் சியான் விக்ரம், விஷால், ராகவா லாரன்ஸ், பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் ராம்சரண் போன்றவர்களையும் லோகேஷ் இணைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களை லோகேஷ் எப்படி தன்னுடைய யூனிவர்சில் இணைப்பார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், அவரது அடுத்தடுத்த படங்களில் இதற்கான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

லோகேஷின் திட்டம்: ஏற்கனவே லோகேஷ் யூனிவர்சில், கார்த்தி, சூர்யா, கமல்ஹாசன், விஜய் ஆகியோர் உள்ள நிலையில் அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களையும் இணைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். லோகேஷ் மொத்தமாகவே 10 படங்கள் மட்டுமே இயக்குவேன் என்று முன்னதாக ஒரு பேட்டியில தெரிவித்துள்ளார். இதுவரை 5 படங்களை இயக்கியுள்ள லோகேஷ், அடுத்ததாக தலைவர் 171 படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ள குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ரோலக்ஸ் கேரக்டரின் படம், இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படங்களையும் லோகேஷ் இயக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X