தீபாவளிக்கு புது ட்ரெஸ்ஸோட பிகில் ஊதிகிட்டு கைதிய போய் பாருங்க

சென்னை: தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, புது படம் இது தான் என்றைக்குமே மாறாத ட்ரெண்ட். அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியன்று புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, தியேட்டருக்கு சென்று புது படத்தை பார்த்து ரசியுங்கள். அது தான் நீங்கள் உண்மையான தீபாவளி கொண்டாடுவதற்கு அர்த்தமாகும்.

தீபாவளி வரப்போகுதா, அப்படியான கண்டிப்பா நம்மல்ல பலபேரு ஒவ்வொரு டிவி சேனல்லயும் என்னென்ன தீபாவளி நிகழ்ச்சிகள் வரப்போகுது, இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக அப்படினு, என்ன புது படம் போடப்போறாங்க அப்படினு மும்மரமா டிவி முன்னாடி உட்கார்ந்து பிரேக்ல போடுவாங்களா அப்படினு காத்துக்கிடந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு. அதெல்லாமே வெரி ஓல்டு ட்ரெண்ட்னு சொல்லுதுங்க இந்த கால நண்டு, சிண்டுகள் எல்லாம்.

In Diwali Day Go to the theater and watch the movie

இப்போதய ட்ரெண்டிங் எந்த மாஸ் ஹீரோவோட படம் தீபாவளிக்கு வெளியாகுதோ அங்கு உடனே ஆன்லைன்ல அட்வான்ஸ் டிக்கெட் புக் பண்ணி அந்த நாளைக்காக காத்துக்கிடக்குது இன்றைய தலைமுறை.

இப்படி ஒருபுறம் தியேட்டர்ல போய் படம் பார்க்க ஆவலாய் ஓரு கூட்டம் இருக்குதுன்னா, மறு பக்கம் தமிழ் ராக்கர்ஸ் போல புது படங்களை திருத்தனமாக ஆன்லைன்ல வெளியிடுற ஓரு கும்பலோட இணையதளங்களில் இருந்து திருட்டுத்தனமா படங்களை டவுன்லோட் செய்து பார்த்து ரசிக்கும் ஓரு கும்பல் மறுபுறம்.

In Diwali Day Go to the theater and watch the movie

திருட்டுத்தனமாக டவுன்லோட் செய்து புது படங்களை பார்த்துவிடவேண்டும் என்று எண்ணும் ரசிகர்களை சொல்லி என்ன செய்வது. அதை வெளியிடும் இணையதளங்களை முதலில் முடக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எத்தனை பேர் எவ்வளவு உழைத்து பெரும்பாடு பட்டு ஓரு படத்தை எடுக்கிறாரகள். அவர்களின் அந்த கடுமையான உழைப்பிற்கு ஏற்ற கூலி கிடைப்பதற்குள் அதை தட்டிப் பறிப்பது எவ்வளவு பெரிய துரோகம். அது நிச்சயம் உடனடியாக ஓரு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும்.

எனவே தீபாவளி என்றால் பட்டாசு, புத்தாடை, புது படம் இது தான் என்றைக்குமே மாறாத ட்ரெண்ட். அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியன்று புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, தியேட்டருக்கு சென்று புது படத்தை பார்த்து ரசியுங்கள். அது தான் நீங்கள் உண்மையான தீபாவளி கொண்டாடுவதற்கு அர்த்தமாகும்.

In Diwali Day Go to the theater and watch the movie

உழைப்பவர்களின் ரத்தத்தை உறிஞ்சுபவர்களை உதாசீனம் செய்யுங்கள். அப்போது தான் அந்த உழைப்பவர்களும் அவர்கள் வீட்டில் ஆனந்தமாக தீப ஒளியை ஏற்றி இனிய தீபாவளி கொண்டாட முடியும். நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்கள் நிச்சயம் அதை செய்வார்கள் என்று நம்புவோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X