ஜவான் சூட்டிங்கில் ஷாருக்கானுடன் பங்கேற்ற தமிழ் சூப்பர் ஹீரோ.. யாருன்னு தெரியுமா!
சென்னை : நடிகர் ஷாருக்கான், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் இயக்குநர் அட்லி டைரக்ஷனில் உருவாகிவரும் படம் ஜவான்.
இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாடட்டமாக உருவாகிவருகிறது. படத்தில் இரட்டை வேடங்களில் ஷாருக் நடித்து வருகிறார்.
படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

பாலிவுட் ஹீரோ ஷாருக்கான்
பாலிவுட்டில் மிகப்பெரிய ஹீரோவாக ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருபவர் ஷாருக்கான், காதல் படங்களில் துவங்கி அனைவரையும் வசீகரித்து ஆக்ஷன் படங்களில் கவனம் செலுத்தி வருபவர். இவரின் படங்களின் ரிலீசுக்காக பாலிவுட் ரசிகர்கள் தவம் கிடப்பார்கள். அந்த வகையில் தன்னுடைய படங்களை ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுத்து வருகிறார் ஷாருக்கான்.

அட்லி இயக்கத்தில் ஜவான்
இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் ஷாருக். விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என ஹாட்ரிக் வெற்றியை தமிழில் கொடுத்த அட்லிக்கு பாலிவுட்டில் எடுத்தவுடன் ஷாருக்கை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாலிவுட்டில் நயன்தாரா என்ட்ரி
இந்தப் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளும் முனைப்புடன் சூட்டிங்கை நடத்தி வருகிறார் அட்லி. படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாகியுள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்தப் படத்தில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி ஷாருக்கிற்கு வில்லனாகியுள்ளார்.

ஷாருக் -விஜய் சேதுபதி காம்பினேஷன்
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது. அப்போது அட்லியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஷாருக் மற்றும் விஜய் இருவரும் கலந்துக் கொண்டனர். இதனிடையே தற்போது நடைபெற்றுவரும் சூட்டிங்கில் ஷாருக்குடன் விஜய் சேதுபதி கலந்துக் கொண்டுள்ளார். இந்த சூட்டிங்கில் பிரியாமணியும் பங்கேற்றுள்ளார்.

காட்சிகளுக்கு முக்கியத்துவம்
இயக்குநர் அட்லி ராஜா ராணி படம் துவங்கி பிகில் படம் வரையில், தன்னுடைய அதிரடியான இயக்கத்தின்மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவரது படங்களில் கதைக்கு அதிக முக்கியத்துவம் இல்லையென்றாலும் காட்சி அமைப்பிற்கு மிகுந்த கவனம் செலுத்துவார்.

கேங்ஸ்டர் விஜய்
பிகில் படத்தில் முதல்முறையாக கேங்ஸ்டராக விஜய்யை காட்டி அதிகமான ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்தப் படங்கள் இவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்துள்ள நிலையில், முதல் படத்திலேயே ஷாருக்கை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி பாலிவுட் ரசிகர்களை ஈர்ப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











