நடிகர் சங்கம் தேர்தல்.. நீதியின் மீது நம்பிக்கை உள்ளது... விஷால் பரபர!
சென்னை: நீதியின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. குளறுபடிகள் காரணமாக 23ஆம் தேதி நடைபெற இருந்த நடிகர் சங்கத் தேர்தலை மாவட்ட பதிவாளர் ரத்து செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பின் பாண்டவர் அணியினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்தனர். அதனை மனுவாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தில் இருந்து உறுப்பினர்கள் நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே என தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் பரபர டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எப்போதும்போல நீதித்துறையும் சட்டமும் நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் என பதிவிட்டுள்ளார் விஷால்.


Click it and Unblock the Notifications











