ஃபோனில் சொன்ன அந்த கடைசி வார்த்தை.. உடைந்து நொறுங்கிய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அப்பா!

By

பாட்னா: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தனது தந்தையிடம் கடைசியாக மூன்று நாட்களுக்கு முன் பேசியுள்ளார்.

Recommended Video

தாயின் Photo உடன் உருக்கமாக sushant போட்ட கடைசி பதிவு!

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் இவர். அடுத்து, சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே ஆகிய படங்களில் நடித்தார்.

எம்.எஸ்.தோனி

எம்.எஸ்.தோனி

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை கதையான, எம்.எஸ்.தோனி: அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இந்தப் படத்தை அடுத்து ராப்தா, வெல்கம் நியூயார்க், சிச்சோர், கேதார்நாத், டிரைவ் ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் அவருக்கு பெயரை பெற்றுத் தந்தன.

தூக்குப் போட்டு

தூக்குப் போட்டு

சுஷாந்தின் மானேஜர் திஷா சாலியன், அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.

தந்தை கே.கே.சிங்

தந்தை கே.கே.சிங்

இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட தகவலை போலீசார், போனில் அவர் தந்தை கே.கே.சிங்கிடம் சொன்னபோது, கே.கே.சிங் மயங்கி விழுந்துவிட்டார். பிறகு கலங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் சமாதானப்படுத்தி உள்ளனர்.

பெருமை சேர்த்த நடிகர்

பெருமை சேர்த்த நடிகர்

தகவல் கேள்விபட்டதும் திகா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சஞ்சிவ் சோருசியா, கே.கே.சிங் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார். அதற்குள் அக்கம் பக்கத்தில் உள்ள பலர் அவர் வீட்டில் கூடி விட்டனர். 'பீகாருக்கு பெருமை சேர்த்த நடிகர். இது பெரிய இழப்பு. திறமையான நடிகர்' என்றார் சஞ்சீவ் சோருசியா.

பாதுகாப்பாக இருங்கள்

பாதுகாப்பாக இருங்கள்

சுஷாந்த் சிங், தனது தந்தைக்கு அவ்வப்போது போன் செய்து பேசுவார். கடைசியாக, 3 நாட்களுக்கு முன் தனது அப்பாவுக்கு பேசி இருக்கிறார். வெளியில் செல்ல வேண்டாம், பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியிருக்கிறார். பிறகு அவர் வீட்டில் வேலை பார்க்கும் லக்‌ஷ்மி தேவியிடம், அப்பாவை வெளியில் அனுப்ப வேண்டாம். பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். அதுவே அவரது கடைசி போன் காலாக இருக்கும் என்று அவர் தந்தை நினைக்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X