10 வருஷமா அவமானத்தையும் தோல்விகளையும்தான் சந்தித்திருக்கிறேன்.. மாஸ்டர் மேடையில் சாந்தனு உருக்கம்!
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சாந்தனு இதைத்தான் தன்னுடைய முதல் படமாக கூற விரும்புவதாக தெரிவித்தார்.
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான லீலா பேலஸ் ஹோட்டலில் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்கியராஜ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சாந்தனு பாக்கியராஜ், மாஸ்டர் படத்தை தனது முதல் படமாக கூறிக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார். மேலும் தனது பத்தாண்டு கேரியரில் வெற்றிகளை விட அதிகமாக அவமானங்களையும் தோல்விகளையுமே சந்தித்திருப்பதாக உருக்கமாக கூறினார்.
மாஸ்டர் படத்தைதான் என்னுடைய முதல் படம் என்று கூறுவேன். பார்வையாளர்கள் மத்தியில் லோகேஷ் எனக்கு நல்ல ரீச்சை கொடுப்பார் என்றும் அவர் கூறினார். லோகேஷ் மானிட்டர் முன்னாள் உட்காரவே மாட்டார் என்றும், மனதிலேயே முழு படத்தையும் ஒளிபரப்பி எடிட் செய்து விடுவார் என்றும் சாந்தனு பாக்கியராஜ்.


Click it and Unblock the Notifications











