பொன்னியின் செல்வன் படத்துல உலகநாயகன்தான் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்.. வெளியான சுவாரஸ்யம்!

சென்னை : சோழர்களின் வரலாற்றை அனைவரும் அறிந்துக் கொள்ளும் வகையில் வெளியான வரலாற்றுப் புதினம் பொன்னியின் செல்வன்.

கல்கியின் அழகான மற்றும் வசீகரமான நடையில் வெளியான இந்த நாவலால் ஈர்க்கப்படாதவர்கள் குறைவு.

காலங்களை கடந்து அனைவரையும் கவர்ந்துவரும் இந்த நாவலை திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

பொன்னியின் செல்வன் படம்

பொன்னியின் செல்வன் படம்

நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகவுள்ள வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கியின் இனிமையான மற்றும் வசீகரிக்கும் நடையில் வெளியான இந்தப் படைப்பிற்கு அந்த காலகட்டத்திலிருந்து தற்போது வரையில் வெறித்தனமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

மணிரத்னத்தின் முயற்சி

மணிரத்னத்தின் முயற்சி

இந்த நாவலை பலரும் பல்வேறு காலகட்டங்களில் படமாக எடுக்க முயற்சி செய்த நிலையில் அவர்களின் முயற்சி பலிக்காமல் போன நிலையில், தற்போது இயக்குநர் மணிரத்னம் தனது மூன்றாவது முயற்சியில் இந்தப் படத்தை சாத்தியமாக்கியுள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து அவர் தனது மெட்ராஸ் டாக்கீசுடன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

அதிரடி புக்கிங்குகள்

அதிரடி புக்கிங்குகள்

இதனிடையே இந்தப் படம் நாளை மறுநாள் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புக்கிங்குகளை மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் பிரமோஷன்களும் ஒருபுறம் மிரட்டலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிரடி புக்கிங்குகள்

அதிரடி புக்கிங்குகள்

இதனிடையே இந்தப் படம் நாளை மறுநாள் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புக்கிங்குகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்களை போட்டிப் போட்டுக் கொண்டு புக்கிங்குகளை மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் பிரமோஷன்களும் ஒருபுறம் மிரட்டலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரமோஷனல் டூர்

பிரமோஷனல் டூர்

படத்தின் நடிகர் நடிகைகளும் ஒருபக்கம் பிரமோஷனல் டூரில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் துவங்கிய அவர்களின் இந்தப் பயணம் கேரளா, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி என நீண்டுள்ளது. மும்பை பிரமோஷனில் ஐஸ்வர்யா ராய், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களும் கலந்துக் கொண்டனர்.

தொடர் ட்ரெண்டிங்

தொடர் ட்ரெண்டிங்

இதனிடையே, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இந்தப் படம் காணப்படுகிறது. தொடர்ந்து போஸ்டர்கள், பேட்டிகள், ப்ரமோக்கள் என சமூக வலைதளங்கள் தெறித்து வருகின்றன. அந்த வகையில் படம் குறித்த பல்வேறு தகவல்களும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.

துவக்கமே கமல்தான்

துவக்கமே கமல்தான்

இதனிடையே, தமிழில் இந்தப் படத்தின் துவக்கமே உலகநாயகன் கமலின் வாய்சுடன்தான் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் படத்தின் முதல்கட்டமாக மம்முட்டி வாய்ஸ்ஓவர் கொடுத்துள்ளதாக சமீபத்தில் கேரளாவில் பிரமோஷனின்போது இயக்குநர் மணிரத்னம் தெரிவித்திருந்தார்.

கமலின் வாய்ஸ் ஓவர்

கமலின் வாய்ஸ் ஓவர்

அதேபோல, தமிழில் துவக்கத்திலேயே கமலின் வாய்ஸ் ஓவரில், சோழகர்களின் வரலாறு மற்றும் கேரக்டர்களின் அறிமுகம் போன்றவற்றை கமல் செய்துள்ளார். கமல் தயாரிக்க முற்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த செய்தி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X