அண்ணாவிலிருந்து சித்தப்பா.. கலாய்த்த பிரின்ஸ் நாயகி மரியா.. கடுப்பான சூரி!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், மரியா மற்றும் சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது பிரின்ஸ் படம்.
இந்தப் படம் தீபாவளியையொட்டி வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கார்த்தியின் சர்தார் படத்துடன் பிரின்ஸ் படமும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறித்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

பிரின்ஸ் படம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து டாக்டர், டான் என வெற்றிப்படங்கள் ரிலீசாகி அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. இந்த இரண்டு படங்களும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது. இந்த இரண்டு படங்களிலும் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

காமெடியை விடாத சிவகார்த்திகேயன்
காமெடியை விட்டுவிடாமல் அதில் சென்டிமெண்ட் உள்ளிட்ட மற்ற விஷயங்களையும் புகுத்தி தன்னுடைய படங்களை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பம் முதலே காமெடியை தன்னுடைய படங்களில் முதன்மையாக கொண்டு இவர் படங்களை வெளியிட்டு வருகிறார்.

தீபாவளிக்கு ரிலீசாகும் பிரின்ஸ்
இதனிடையே அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது பிரின்ஸ் படம். தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 21ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் படக்குழு பங்கேற்று பேசியது. அப்போது மேடையேறி பேசிய சூரி, கதையின் நாயகி மரியாவை வைத்து காதல் செய்ய முற்பட்டார்.

சூரியை கலாய்த்த மரியா
ஆனால் மரியாவோ சூரியை வைத்து காமெடி செய்துவிட்டார். லவ் யூ மரியா என்று சூரி சொல்ல, பதிலளித்த மரியாவோ ஐ லவ் யூ சூரி அண்ணா என்று அழைத்து அவரை கலாய்த்தார். தொடர்ந்து சூரி ஐ லவ் யூ டார்லிங் என்று சொல்லுமாறு சூரி கேட்க, பக்கத்தில் இருந்த சிவகார்த்திகேயன் மரியாவிற்கு சொல்லிக் கொடுக்க, சூரி சித்தப்பா என்று அழைத்தார் மரியா.

சித்தப்பாவான சூரி
இதனால் கடுப்பான சூரி, சிவகார்த்திகேயனை அடிக்க புறப்பட்டார். இதனால் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து தன்னுடைய தம்பி சிவகார்த்திகேயனை வைத்துக் கொண்டு தன்னால் எந்த இடத்திலும் எதையும் செய்ய முடியாது என்றும் சூரி குறிப்பிட்டார். மொழி தெரியாத நடிகையிடம் கூட ஐ லவ் யூ வாங்க விடாமல் சிவகார்த்திகேயன் தடுக்கிறாரே என்ற ஆதங்கம் அவரிடம் வெளிப்பட்டது.


Click it and Unblock the Notifications











