Leo Special Show - விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. லியோ 7 மணி காட்சிக்கு அனுமதி.. ஆனால் ஒரு ட்விஸ்ட்
சென்னை: Leo Special Show (லியோ சிறப்பு காட்சி) லியோ படம் நாளை மறுநாள் ரிலீஸாகவிருக்கிறது. இதற்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்துகொண்டிருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம்தான் இப்போது கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கும் லியோவுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

லியோ புக்கிங்: லியோ படத்துக்கான டிக்கெட் புக்கிங் சில வாரங்களுக்கு முன்பு வெளிநாட்டில் தொடங்கியது. சில நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாட்டில் தொடங்கியது. ஐமேக்ஸிலும் படம் திரையிடப்படவிருக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் புக் செய்துவருகின்றனர். அதேசமயம் இன்னும் ஒரு சில தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் சொல்கின்றனர்.
ஓவர் ரேட்: அதேபோல் இன்னொரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அதாவது லியோ படத்தின் டிக்கெட் ரேட் அநியாய விலைக்கு விற்கப்படுகிறது என்பதுதான் அது. பெங்களூரில் 2,500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அதே விலையில் தமிழ்நாட்டிலும் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்திருக்கிறது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறப்பு காட்சி: இதற்கிடையே லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதனால் படக்குழுவும் ரசிகர்களும் நிம்மதியடைந்தனர். ஆனால் ஒரு ட்விஸ்ட்டாக சிறப்பு காட்சியை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அனுமதி இல்லை: இதனையடுத்து படக்குழு காலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால் அதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. அதனையடுத்து 7 மணி காட்சிக்காவது அனுமதி வேண்டுமென கோரிய படக்குழுவிடம் அதுகுறித்து தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது.
புதுச்சேரியில் அனுமதி: இதனால் படக்குழு மீண்டும் தமிழ்நாடு அரசிடம் 7 மணி காட்சிக்கு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் லியோ படத்துக்கு 7 மணி காட்சிக்கான அனுமதி கிடைத்துள்ளது. 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வேண்டுமென்று ரசிகர்கள் சார்பில் புதுச்சேரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைத்ததை அடுத்து புதுச்சேரி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











