ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆடி அசத்திய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்.. சைமா விருது விழாவில் சுவாரஸ்யம்!

பெங்களூரு : 2022ம் ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று மற்றும் இன்று நாட்கள் நடைபெற்றன.

இந்த விருதுகள் வழங்கும் விழாவில் பாலிவுட் முதல் கோலிவுட் வைர ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்த விழாவில் பல சுவாரஸ்யங்கள் நடைபெற்றன. பாலிவுட்டிலிருந்து ரன்வீர் சிங் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

சைமா 2022 விருதுகள்

சைமா 2022 விருதுகள்

2022ம் ஆண்டிற்கான சைமா விருதுகள் வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் மிகவும் சிறப்பான வகையில் நடைபெற்றுள்ளது. இதில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

பல்வேறு பிரிவுகளில் விருதுகள்

பல்வேறு பிரிவுகளில் விருதுகள்

இந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து டாக்டர், டான் என வெற்றிகளை கொடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தென்னிந்திய மொழி படங்களுக்கு விருதுகள்

தென்னிந்திய மொழி படங்களுக்கு விருதுகள்

தென்னிந்திய அளவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளுக்கான விருதுகள் வழங்கும் இந்த விழா தன்னுடைய 10வது ஆண்டுக் கொண்டாட்டத்தையும் இந்த விழாவில் சேர்த்துக் கொண்டது. இதையொட்டி இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கமலுக்கு முத்தம் கொடுத்த ரன்வீர் சிங்

கமலுக்கு முத்தம் கொடுத்த ரன்வீர் சிங்

நிகழ்ச்சியில் உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், கன்னட நடிகர் யஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் மிகவும் கலகலப்பாக பங்கேற்றார் நடிகர் ரன்வீர் சிங். முன்னதாக நிகழ்ச்சியின் துவக்கத்தில் உலகநாயகனின் கைகளைப்பிடித்து முத்தம் கொடுத்தது அனைவரையும் கவர்ந்தது.

விருதுகளை அள்ளிய புஷ்பா படம்

விருதுகளை அள்ளிய புஷ்பா படம்

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான சைமா விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை இரண்டாவது முறையாக பெற்றது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் புஷ்பா படத்திற்காக இந்த விருதை பெற்ற நிலையில் புஷ்பா படம் சிறந்த படத்திற்கான விருதையும் அந்தப் படத்தின் இயக்குநர் சுகுமார் சிறந்த இயக்குநருக்கான விருதையும் பெற்றுள்ளனர்.

பூஜா ஹெக்டேவிற்கு யூத் ஐகான் விருது

பூஜா ஹெக்டேவிற்கு யூத் ஐகான் விருது

இதேபோல சிறந்த பாடலாசிரியர் மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகளும் புஷ்பா படத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றை முறையே சந்திரபோஸ் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் பெற்றுக் கொண்டனர். இதனிடையே சிறந்த யூத் ஐகான் விருதுகளை விஜய் தேவரகொண்டா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கமலுக்கு ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டார் விருது

கமலுக்கு ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டார் விருது

இதேபோல ரன்வீர் சிங்கிற்கு பாலிவுட்டின் சிறந்த பிரபல நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டாருக்கான விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த துணை நடிகைக்கான விருது வரலட்சுமி சரத்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆடிய ரன்வீர் சிங்

ஸ்ரீவள்ளி பாடலுக்கு ஆடிய ரன்வீர் சிங்

இந்த நிகழ்ச்சியில் மேடையேறிய ரன்வீர் சிங், தன்னுடைய மனைவி தீபிகா படுகோனேவிற்காக கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பேசி அசத்தினார். தொடர்ந்து புஷ்பா படத்தின் ஸ்ரீவள்ளி பாடலுக்கு மேடையில் ஆடி அனைவரையும் கவர்ந்தார். ஒரு கட்டத்தில் இவர் ஆடியபோது அவரது ஷு கழன்று அவருக்கு இம்சையை கொடுத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X