கோலிவுட் போல பாலிவுட்டில் கொடுப்பதில்லை -காஜல் அகர்வால்
சென்னை: தென்னிந்திய தயாரிப்பாளர்களுக்கு மனசு ரொம்ப பெருசுதான். தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடுக்கும் சம்பளத்தைப் போல பாலிவுட்டில் கொடுப்பதில்லை என்று காஜல் அகர்வாலே கூறியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு தமிழ், தெலுங்கு திரைத்துறையில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. கவர்ச்சியோடு கனமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். அவர் சமீபத்தில் நடித்த கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று, இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சாதாரணமாக ஒரு தெலுங்கு திரைப்படத்தின் சம்பளம் என்று பேசினால், அனைத்து சலுகைகளுக்கு பிறகு காஜல் அகர்வால் ரூ.1.75 கோடிக்கு அருகில் வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து செலவுகளுடன், மொத்த ஊதியம் 2 கோடியை அவருக்கு கொடுக்கிறார்களாம்.
டோலிவுட்டில் காஜல் அகர்வால் மிகப்பெரிய கதாநாயகியாக இருந்தாலும், அவர் பாலிவுட் திரைத்துறையில் இன்னமும் கூட போராடும் நட்சத்திரம் தான். ஆனாலும் காஜலின் டோலிவுட்டின் புகழை எளிதாக எண்ணவில்லை.

நடிகை காஜல் அகர்வால் மும்பை சாகா திரைப்படத்தில் நடிக்கிறார் என்று செய்தி ஏற்கனவே வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜான் ஆபிரகாமும் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வாலுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே கொடுத்ததாக தகவல்கள் வெளிவருகின்றன.
அது உண்மையா அல்லது நட்பின் அடிப்படையில் அப்படி ஒரு டீலிங்கா என்பது தெரியவில்லை. இந்த திரைப்படத்தில் அவருக்கு ஒரு பாடலும் இருக்கிறது. நடிகை காஜல் அகர்வால் தனது தமிழ், தெலுங்கு திரைத்துறையில் வாங்கும் சம்பளத்தை, பாலிவுட் திரைத்துறையில் வாங்க முடியாது என்று அவரே எல்லோரிடமும் வெளிப்படுத்தியதாக செய்திகள் பரவி வருகிறது.

முன்னதாக காஜல் அகர்வால் இரண்டு பாலிவுட் திரைப்படங்களில் நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் ரன்தீப் ஹூடா ஜோடியாக நடித்தார். அது போல மும்பை சாகா திரைப்படத்திற்கும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











