STR48ல் போர்வீரனாக களமிறங்கும் சிம்பு.. ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை : நடிகர் சிம்பு அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அவரது நடிப்பில் தற்போது முதிர்ச்சி காணப்படுகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் சிம்புவின் நடிப்பில் ரிலீசாகியுள்ளது.

அடுத்ததாக சிம்பு நடிப்பில் பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு


நடிகர் சிம்பு சமீப காலங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து வெற்றிப்படங்கள் ரிலீசாகி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் கவுதம் மேனன் நடிப்பில் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் சிம்பு. சமீப காலங்களில் அவரது நடவடிக்கைகளில் முதிர்ச்சி காணப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பத்து தல படம்

பத்து தல படம்

கதைத்தேர்வுகளிலும் சிறப்பான கவனத்தை சிம்பு செலுத்தி வருவதாகவும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படம் வரும் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. படத்தில் சிம்புவுடன் ப்ரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக் மற்றும் கவுதம் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

 ஏஆர் ரஹ்மான் இசை

ஏஆர் ரஹ்மான் இசை

இந்தப் படம் சென்சார் செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான், இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதேபோல படத்தின் ட்ரெயிலரும் ரசிகர்கள் விருப்பத்திற்குரிய வகையில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

STR48 படத்தில் சிம்பு

STR48 படத்தில் சிம்பு

இந்நிலையில் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் STR48 படத்தில் சிறப்பான பிளாஷ்பேக் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் போர்வீரராக நடிகர் சிம்பு நடிக்கவுள்ளாராம். மிகவும் பவர்ஃபுல்லாக இந்த கேரக்டர் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிக்க திஷா பட்டானி, பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இவர்களில் யார் இறுதிச் செய்யப்படுவார்கள் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த ப்ரமோ

STR48 படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளதாகவும் தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான ப்ரமோவும் ரசிகர்களை கவரும்வகையில் வெளியாகியுள்ளது இந்தப் படமும் கேங்ஸ்டர் படமா இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. இந்தப் படத்தின்மூலம் தன்னுடைய கனவுகள் நனவாக உள்ளதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார். மேலும் Blood and Battle என்றும் தன்னுடைய சமூக வலைதளத்தில் ப்ரமோ வீடியோவுடன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X