தமிழ் சினிமாவில் 1 ரூபாய் மட்டுமே முன் பணமாக வாங்கும் ரஜினி & கவுண்டமணி

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்சமயம் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணியின் சம்பளம் பற்றி இயக்குநர் பி.வாசு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

 சூப்பர் ஸ்டாரும் சக்ரவர்த்தியும்

சூப்பர் ஸ்டாரும் சக்ரவர்த்தியும்

கதாநாயகர்களில் சூப்பர் ஸ்டார் எனவும் நகைச்சுவை நடிகர்களில் நகைச்சுவை சக்கரவர்த்தி எனவும் அழைக்கப்படுபவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி. 16 வயதினிலே திரைப்படத்தில் தொடங்கிய இவர்களது கூட்டணி பல படங்களில் வெற்றிகரமாக வலம் வந்தது. குறிப்பாக மன்னன், உழைப்பாளி படங்களில் இடம் பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகள் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலம். இரண்டு படங்களையுமே இயக்குநர் பி.வாசு தான் இயக்கியிருப்பார்.

 நடிகன் சின்ன தம்பி

நடிகன் சின்ன தம்பி

அதேபோல இயக்குநர் பி.வாசு இயக்கிய பல படங்களில் கவுண்டமணி நடித்துள்ளார். அதில் நடிகன், சின்னத்தம்பி, சேதுபதி ஐ.பி.எஸ் போன்ற படங்களில் அவருடைய நகைச்சுவை காட்சிகள் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவை. இப்படி சூப்பர் ஸ்டாராகவும் நகைச்சுவை சக்கரவர்த்தியாகவும் முன்னணி நடிகர்களாக விளங்கிய ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி வெறும் ஒரு ரூபாய் மட்டுமே முன் பணமாக வாங்கிக் கொண்டு நடிப்பார்கள் என வாசு தெரிவித்துள்ளார்.

 கோடிகளில் சம்பளம்

கோடிகளில் சம்பளம்

இன்றைய காலத்தில் நடிகர்களில் பல பேர் முழு சம்பளத்தையும் படத்தின் துவக்கத்திலேயே வாங்கிக் கொண்டுதான் நடிப்பார்கள். அதற்கு காரணம் படம் முடிவடையும் தருவாயில் சில நேரம் தயாரிப்பாளரிடம் பணம் இல்லாமல் போய்விடும். அதனால் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனை தவிர்க்கவே நடிகர்கள் அவ்வாறு முழு பணத்தையும் வாங்கிக் கொள்வார்கள். அப்படி முன்னதாகவே கொடுக்கும் பணத்திற்கு அந்தப் படம் முடிந்து திரையில் வரும் வரை ஒவ்வொரு மாதமும் வட்டி கட்டி வருவார்கள் தயாரிப்பாளர்கள்.

 ரஜினி கவுண்டமணி

ரஜினி கவுண்டமணி

இப்படி இருப்பவர்கள் மத்தியில் அப்போதே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்ற பட்டியலில் இருந்தாலும் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே முன் பணம் வாங்கிக் கொள்வார்களாம் ரஜினி மற்றும் கவுண்டமணி. படப்பிடிப்பு முடிந்து டப்பிங்கில் கடைசி ரீல் பேசும் பொழுதுதான் தங்களுடைய சம்பளத்தை வாங்குவார்களாம். ரஜினிகாந்த் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பார் என்று பலரும் பல பேட்டிகளில் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கவுண்டமணியும் அப்படித்தான் செய்வார் என்று வாசு குறிப்பிட்டிருக்கிறார். இதே போல நடிகர் விஜயகாந்த் கூட பலமுறை தன்னுடைய சம்பளத்தில் பெரும் பகுதியை விட்டுக் கொடுத்துள்ளார் என்று பல தயாரிப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X